பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரோவைக் கண்டவுடன் ஜான் ஃபீல்ட் தம்முடைய வறுமையின் வரலாற்றை ஒப்பித்தார். இதனைக் கேட்ட தோரோ சிக்கனம், எளிய வாழ்க்கை என்பவைபற்றிச் சில சொற்களால் அவருக்கு எடுத்துரைத் தார். ஃபீல்டின் மனைவியார் அந்தப் பெரிய உயரமான அடுப்பின் சிதை யாத பகுதிகளில் பல முறை சமையல் செய்த சிறப்பைக் கண்டு வியந்தார் தோரோ. மேலும் அழகிய வட்ட மான முகத்தையும், ஒட்டியுலர்ந்த மார்பையும் பெற்றி ருந்துங்கூட என்ருவது ஒருநாள் தம் நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முடியும் என்றே நம்பினர் அந்த அம்மையார்,: எனக் குறித்துள்ளார். வால்டனில் வாழும்பொழுது தோரோவிடம் துப்பாக்கி இல்லை; சுடுவதால் இன்பம் அடையும் வயதை அவர் எப்பொழுதோ கடந்துவிட்டார். வயதும் அனுபவமும் முதிர முதிர, மனிதர்கள் தங்கட்கும் விலங்குகட்கும் இடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள செயற்கை வேறு பாட்டை அறிந்தார். வால்டனில் அவர் மேற்கொண்ட இயற்கை வாழ்வின் பயஞக, உயிரியலாரும், வேட்டையாடு பவர்களும் உயிருடன் வாழும் விலங்குகட்கு இழைக்கின்ற கொடுமையால் அவை அடையும் துன்பத்தைக் கண்டு பெரிதும் வருந்தினர். ஒவ்வொரு உயிரியலாரும் ஒரு துப்பாக்கியுடன் உலவி வந்த காலம் அது. அதுபற்றி அவர் கீழ்வருமாறு எழுதினர். சென்ற சில ஆண்டு களில் பறவை வேட்டையில் ஈடுபட்டிருந்தேன். பறவை இயல் படிப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தேன். புதிய இனப் பறவைகளேயே தேடிச் சென்றேன். ஆளுல் பறவை இயல் படிப்பதற்கு இவ்வழி யல்லாமல் பிற பல்வேறு வழிகள் உள்ளன என்பதை இப்பொழுது உணர்கிறேன். பறவைகளின் பழக்க வழக்கங் களை மிகக் கூர்ந்து கவனிக்க வேண்டி யிருத்தலின், அந்த ஒரு காரணத்திற்க்ாகவேனும் துப்பாக்கியை ஒதுக்கிவிட நான் தயாராயிருக்கிறேன்.: - இால்டனில் மீன் பிடிப்பதில் உள்ள உற்சாகத்தைக் கூட அவர் விரைவில் இழந்துவிட்டார். சுய மரியாதையை இழக்க வேண்டியுள்ளது என்பதற்காகவே அதில் உள்ள ஆர்வம் குறைந்து விட்டது. ஒவ்வொர் ஆண்டும் மீன் 52