பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிக்கும் தொழிலைச் சிறிது சிறிதாக விட்டுவிட்டேன். இதனுல் மானிட உயிர்களிடத்தில் அதிக அன்போ அல்லது அதிக ஞானமோ பெற்றுவிட்டதாகப் பொருளில்லை. என்ருலும் தற்போது மீன் பிடிப்பதே இல்லை. ஆனல் இத்தகைய ஒரு வனுந்தரத்தில் வாழ வேண்டு மாளுல் மீன் பிடிக்கவும், வேட்டையாடவும் மறுபடியும் தொடங்க வேண்டும்போல் தெரிகிறது. மேலும் முற்றிலும் இறைச்சி உணவை மேற்கொள்ளும் பழக்கத்தில் உள்ள அசுத் தமும் விளங்கிற்று. ஒவ்வொரு நாளும் வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டுத் துய்மை யாக இருக்க முயல்வதும், வீட்டைத் துப்புரவாகவும், நாற்றம் இல்லாமலும் வைத்துக் கொள்வதும் கடினமாக இருந்தன.” ஆனல் வேட்டையாடுதல் என்பது காட்டினிடத்தும் இயற்கையிடத்தும் ஒர் இளைஞனுடைய மனத்தை ஈடுபடு மாறு செய்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார் : துப் பாக்கியை ஒருமுறைகூடச் சுட்டு அறியாத பையனைக் கண்டு பரிதாபப்படுகிறேன். அவன் கல்வியில் ஒரு குறை ஏற்பட்டிருக்கிறது... ... சிந்திக்கும் சக்தி பெருத பையனுக இருக்கும் பருவத்தைக் கடந்த எவரும் வேண்டுமென்றே எந்த உயிரையும் கொல்ல மாட்டார். ஏனெனில் கொல்லப்படும் அந்த விலங்கும், கொல்லும் மனிதனேப் போலவே தன் உயிரில் பெரும் பற்று வைத்திருக்கிறது ... ...?? இந்த முறையில்தான் புதிய இளைஞன் ஒருவனுக்குக் காட்டைப்பற்றிய அறிமுகம் நடைபெறுகிறது. தோரோ வின் தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களில் இதுவும் ஒன்று. 'மனிதன் முதலில் காட்டிற்குள் நுழையும்போது மீன் பிடிப்பவனுகவும், வேட்டைக்காரணுகவுந்தான் செல்கிருன். ஆனல் வாழ்க்கையில் உயரக்கூடிய வாய்ப்பு ஏதேனும் இருந்தால் ஒரு கவிஞனேப் போலவோ அன்றி உயிரியல் வல்லுநனைப் போலவோ உயிர்களின் தாரதம்மியத்தை அறிகிருன். அறிந்தவுடன் துப்பாக்கியையும், தூண்டிலே யும் தூர விட்டு விடுகிருன். மக்களில் பெரும்பாலோர் இத் துறையில் இன்னும் இளைஞர்களாகவே இருக்கின் றனர். சில நாடுகளில், வேட்டை பாடும் தொழிலை மேற் கொண்டுள்ள சமய போதகர்களேக்கூட அதிகம் காண் லாம்; அத்தகைய போதகர்கள் மேய்ப்போனிடம் உள்ள 53