பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்து இருக்கின்றனர்; ஏனெனில் இயற்கையின் அழகைக் கவிஞர்கள் மட்டுமே பாடத் துணிகின்ற கால மாகிய 1830 ஆம் ஆண்டாகும் அது. வெளியே சென்று, வார இறுதி நாட்களேக் கழிக்கும் வழக்கம், இன்னும் முக்கால் நூற்ருண்டுக்குப் பின்னர்த்தான் மக்களிடையே பரவப்போகிறது. வசந்தத்தின் முதல் சனிக்கிழமையாகும் அன்று. தோரோகுடும்பத்தினர் இன்றுதான் முதன் முதலில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பதினுேரு வயதுடைய லோபியா நடக்கும்பொழுதே மலர் பறித்துக்கொண்டு செல் கிருள்; ஏறத்தாழப்பதின்மூன்று வயதுடைய ஹென்றி.சிவப்பு இந்தியனேப் போல அங்குமிங்கும் விரைந்து ஒடுகிருன். இத்தகைய முரட்டுத்தனத்துடன் கூடிய வயதைக் கடந்து விட்ட ஜான், இரண்டு ஆண்டுகள் மூத்தவனகலின் பறவை களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு செல்கிருன். அடுத்துப் பதினெட்டு ஆண்டை அடைந்துவிட்ட ஹெலன், மேலே கூறிய இந்த மூவரையும் விட அடக்கமுடையவளாய், அக் கரையோடு தாவர இயலைக் கற்றுக்கொண்டு நடக்கிருள். இறுதியாகத் தாயும், தந்தையும் வசந்தத்தின் காற்றுப் பட்டமையின், தம் குழந்தைகளைப் போலவே இன்பத்தில் திளேத்துச் செல்கின்றனர்; கிராமவாழ்வில் இன்பத்தையும் இயற்கையில் ஈடுபாட்டையும் தம்முடைய சொத்தா கத் தம் குழந்தைகட்கும் விட்டுச் செல்ல முடியும் என அவர் கள் நம்புகின்றனர். குடும்ப அலுவல்களில் தலைமை ஏற்று நடத்தும் அந்தத் தாய்தான், இந்த வார இறுதிச் சுற்று லாக்களில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் என்று தெரி கிறது. சனிக்கிழமைகளில், எவ்வாருயினும் திறந்தவெளி களில் சுற்றித் திரியவேண்டும் என்ற அவருடைய பிடி வாதத்தின் காரணமாக, அவருடைய ஒரு பிரசவம் வயல் களினிடையே நடைபெற்றது என்றுகூட ஒரு கதை வழங்கு கிறது. பல்லாண்டுகளாக, ஒவ்வொரு சனிக்கிழமை மாலை பிலும், ஆடம்பரமற்ற அந்தத் தந்தையார் வீட்டைச் சார்ந்த தம்முடைய சிறிய தொழிற்சாலையைப்பூட்டி விட்டு, குடும்பத்தைத் தொடர்ந்து காட்டுக்குச் செல்வார். பென் சில்கள் செய்து, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய இடங்களி 2