பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களேச் செலவிட்டார். பக்கத்திலுள்ள குட்டைகளின் கரைகளில் செஸ்னட் கொட்டைகளைத் தேடிக்கொண்டு அவர் செல்கையில் தம்முடைய குடிசை வாழ்க்கைச் சோத னேயை ந்யூ இங்கிலாந்தின் குளிர்காலத்தில்கூடக் கொண்டு செலுத்த விரும்பினுர். இரவு இருட்டிய பிறகுகூடக் காட்டின் அந்த காரத்தில் தாம் வழி கண்டு பிடித்து மீள்வதற்காக இரவு நேரங்களில் சுற்றித் திரியத் தொடங்கினர். இரவை எவ்வாறு விரும்பினுரோ அவ்வாறே குளிர்காலத்தையும் விரும்பிஞர். நல்ல சீதோஷ்ணமுள்ள நாட்களில் சுற்றித் திரிவதுபோலவே, குளிர், மழை, இருட்டு உள்ள நாட்களிலும் சென்று வந்தார். குளிர்காலம் வந்தவுடன் அன்ருடம் குட்டையின் உஷ்ணநிலையை ஆராய்ந்தார். ஆழமான நீர்ப்பகுதியைக் குளிரச்செய்ய வட காற்றுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறதென்பதைக் கண்டு குறித்து வைத்தார். பல்வேறு வடிவங்களும், அழகும் எவ்வாறுள்ளன எனக் கண்டார். அன்றைய சமுதாயம் ரயில் பாதைகள், பள்ளிக் கூடங்கள், பின்னும் பற்பல துறை மேற்பார்வையாளர் களால் நிறைந்திருந்தது. அந்த நிலையில் தம்மை "பனிப் புயல் மேற்பார்வையாளர் என்று அவர் கூறிக் கொண் டார். அவர் தனிமையாகவும், எமர்ஸன் முதலிய நண்பர்க ளோடும் பலமுறை பனிச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட் டார். ஒர் அங்குல கனமுடைய பனிக்கட்டியின் மேல் படுத்துக்கொண்டு, கண்ணுடியின் பின்புறம் பார்ப்பது போலக் குட்டையின் உள்ளே என்ன நிகழ்கிறதென்பதைக் கண்டு வந்தார். அன்ருடம் அவர் எழுதிவந்த நாட்குறிப்பில் “பல்வேறு புள்ளி விவரங்களையும், விவரக் குறிப்புகளையும், தம் முடிவுகளேயும், கருத்துக்களையும் குறிப்பிட்டு வந்தார். குளிர்காலம் வளர வளர அவருடைய தனிமையும் அதிகரித்தது. பனிக்கட்டி மிகுதியாக விழுந்த காலத் தில் ஒரு வாரம் இரண்டு வாரங்கட்கு எந்த மனிதரும் என் குடிசைப் பக்கம் வரத் துணியவில்லை ஆளுல் காட்டு எலியைப்போல் நான் வசதியாக வாழ்ந்து வந்தேன்......... அந்தப் பெரிய பனிமழை அதனைப்பற்றிக் கேட்பதுகூட eTTTT TT AAAA AAAA TTTTTA TTT ekAAA AAAA AAAAA வெப்பமும் நான் உலாவப் போவதைத் தடை செய்யவில்லை ......... ஏனென்ருல் ஆழமான பனிக்கட்டியின் மேல் நடந்து 55