பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட எட்டு அல்லது பத்து மைல்கட்கு அப்பால் உள்ள ஒரு கருப்புப் பர்ச் மரத்தையோ அல்லது மஞ்சள் பர்ச் மரத்தையோ அல்லது பழைய நண்பணுகிய பைன் மரத் தையோ சென்று கண்டு வருவேன். பனிப் பொடியை வாரி இறைக்கும் குளிர்காற்றை அவர் பெரிதும் விரும்பினுர். பனிக்கட்டி அவருடைய ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் அதற்குத் திருப்பிக் காட்டிஞர். இரவு நேரங்களில் ஆந்தை குழறுதலேயும், அவருடைய விட்டின் அருகே ஜன்னலின் கீழே பனிக்கட்டியின் மேல் அமர்ந்து நசிகள் ஊளே இடுவதையும் அவர் கேட்டார். அன்றியும் குட்டையில் தேங்கியிருந்த பனிக்கட்டி மெள்ள மெள்ள உடைந்து சத்தம் செய்வதையும் கேட்டுக் கொண்டிருப் பார். அந்தப் பணிக்கட்டி உறக்கம் வராமல் படுக்கையில் திக் கனவுகள் கண்டு புரண்டு கொடுப்பதைப்போல் இருந்த தாம். அவர் பகல் நேரத்தில் அணில்கள், ஜேப் பறவை, டிட் பறவைகள் முதலியவற்றிற்கும், இரவு நேரத் தில் இனிப்புச் சோளம், ரொட்டித் துண்டு ஆகியவற்ருல் முயல்கட்கும் உணவு கொடுத்தார். குழி முயல்கள் அவருடைய குடிசையின் கீழேயே வாழ்ந்து வந்தன. எனவே, அவர் போடும் உருளேக் கிழங்குத் துண்டுகட்காக அவை அவரிடம் வந்தன. குளிர்காலத்தில் உலவும் இந்தப் பிராணிகளின் விடாப்பிடியும், முரட்டுத்தனமும் அவரை மிகவும் கவர்ந்தன. அந்தக் குளிர்காலத்திலும் அவை இறவாமையால் அந்தப் பிராந்தியத்தில் உயிர் வாழத் தகுதியுடையவை தாமே என்பதை நிரூபித்தன. இந்தப் பறவைகள், ஆந்தைகள், தவளைகள் என்பவற்றுடனேயே அவர் வாணுளேக் கழித் திருப்பார். ஆளுல், ஒருநாள் "மாலே இரண்டு மணியளவில் உலகத்தின் இருசு தேய்ந்து சப்தமிட்டதால் அதற்கு எண்ணெய் இட வேண்டும்: என்று கருதிய அவர், வாழ்க்கையில் புதிய ஒரு காட்சியைக் கண்டு ஒரளவு தேக்கம் ஏற்பட்டு விட்டதை உணர்ந் தார். ஆகவே தம்முடைய சாமான்களே எடுத்துக் கொண்டு குடிசையை விட்டுச் சென்ற அவர் மீண்டும் அங்கு வசிக்கவே இல்லை.