பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 5

  • சாதாரணமான விலங்குகள் என்று ஏனைய

உயிரினங்களைக் கருதுவதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அவை தவருண பேச்சுக்கள் எவற்றையும் பேசாமையால் நான் அவற்றிடம் மிகவும் ஈடுபட்டுள்ளேன்.: --தோரோவின் நாட்குறிப்பு. 1847 செப்டம்பர் 6 ஆம் நாள் வால்டனிலுள்ள தம் குடி சையை தோரோ இறுதியாக விட்டுச் சென்ருர், வால்டன் அவருடைய வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமே விளங் கியது ; அங்கு வாழ்ந்த நாட்களில் அதனுடைய சத்தான பகுதியை அவர் உறிஞ்சிக் கொண்டார். எனவே, அதை நீங்குவதுபற்றிச் சிறிதும் கவலைப்படாமல் புதிய அனுபவங் களிற் புகுந்தார். ஏனென்ருல், வாழ்க்கை என்பது பொருளைச் சேகரித்துக் கொண்டு சமுதாய ஏணியில் :படிப்படியாக ஏறுவது அன்று என்றும், ஒரு சோதனையிலி ருந்து மற்ருெரு சோதனைக்குச் செல்வதே அது என்றும் கண்டார். அகத்தே தோன்றும் விருப்பங்களே நோக்கித் துணிவுடன் முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என அவர் கருதினர். அந்த முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு மனிதனும், 'கண்ணுக்குத் தெரியாத ஒரு வரம்பைக் கடக்க வேண்டிச் சிலவற்றை விட்டு முன்னேற வேண்டும்; அவ்வாறு செய்தால்தான் புதிய அனைத் துலகப் (universal) பரந்துபட்ட கொள்கைகள் தோன்றி வளர முடியும் என்றுங் கூறினர். வால்டனில் ஆழ்ந்து அனுபவித்த அனுபவத்தின் மூலம் தம் ஆளுமையைப் பலப்படுத்தி வளர்ப்பதிலேயே தம் முன்னேற்றம் இருப்பு தாக அவர் கருதினர். அங்கேதான் அவர் இதுவரைத் தேடிச் சென்: த பொருளே-அதாவது தம்மையே-கண் டார். இப்பொருளேக் காண்பதுதான் வாழ்வின் முடிவான குறிக்கோள் என்று எமர்ஸனும் கூறினர். எழுத்தாளர் என்ற முறையில் தோரோ தமக்குரிய பாதை, தம் பலம், தம் தனித்தன்மை ஆகியவற்றை வால்டன் வாழ்க்கையில் 57