பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதுடன், தம் எழுத்து நடையில் வெறும் ஏட்டுச் சுரைக் காயாகவும், மரபு பற்றியதாகவும் இருந்த பகுதிகளே ஒழித்தார். இயல்பிலேயே துறவியாக இல்லாத ஒருவர்க்கு இரண்டு ஆண்டுக் காட்டு வாழ்க்கை போதுமானதாகும். ஒரு மாற்றம் பெறுவதற்கு அவர் தயாராக இருந்தார். எமர்ஸன் சொற்பொழிவு பாத் திரையாக ஐரோப்பா சென்றுள்ளார் என்ற செய்தியும் இளைத்த உடம்பையுடைய லிடியன் தம் வீட்டையும் தோட்டத்தையும் கவனித்துக் கொள்வதற்கு ஹென்றியுடைய உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியும் தெய்வானுகடலமாக அப்பொழுது கிடைத் தன. எமர்லனுடைய வீட்டில் வாழ்வதை அவர் விரும்பினுர். அவருடைய திறமை அங்குப் போற்றப் பட்டது; அவருடைய கைத்தொழில் திறமைக்கு இடம் அளிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அங்கு நிறைந்திருந்தன; மனத்துக்குகந்த நண்பர்களும் எழுதுவதற்குரிய தனி அறையும் அங்குண்டு. அவருடைய பெற்ருேரின் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் அ தி க ப் படி யான அமைதியை எமர்ஸன் வீட்டில் கண்டார். ஹென்றி வால்டனிலிருந்து மீண்டபொழுது கையுடன் கொண்டு வந்த காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூலே அச்சிடுவதற் காக ஒரு வெளியிட்டாளரைத் தேடி எமர்ஸன் மிகவும் பாடுபட்டார். ஆதலின் நன்றியைத் திருப்பித் தருவதில் தோரோ மகிழ்ச்சி யடைந்தார். 1847 இன் பிற்பகுதியில் எமர்ஸனுடைய வீட்டிற் சென்று வாழத் தொடங்கினர். எமர்ஸனுடைய தோட்டக் காரகுன, குடிகார ஹ9 ஹவேலன் என்ற ஐரிஷ்காரன் தோரோவின் வால்டன் குடிசையை எடுத்துக்கொண்டான். குட்டையின் அருகிலிருந்த அக் குடிசையை பீன்ஸ் வயல் கட்குப் பக்கத்தில் நகர்த்திக் கொண்டான். அதனைச் சந்தனத் தோட்டமாக மாற்றியமைக்க அவன் விரும்பினு. லும் இறுதி வரை அவ்வாறு செய்யவில்லை. அந்தப் பழைய குடிசை மனேயில் புல் மண்டிவிட்டது. அந்த ஐரிஷ்காரன் விட்டுச் சென்ற பிறகு தோரோவே அந்த பீன்ஸ் வயல்கட்குச் சென்று, எமர்ஸனுக்காகப் பைன் மரங்களே நட்டு வந்தார். பின்னர், அந்தக் குடிசையை விலக்கு வாங்கிய குடியானவர் ஒருவர் கருவிகள் வைக்கும் 58