பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைந்த உறுப்புக்களையும், முண்டும் முடிச்சுமான ஓக் மரத் தையும், செடார் மரங்களின் நேரான பகுதிகளையும் எடுத்துக்கொண்டு 1847 இல் ஆல்காட் வீடு கட்டத் தொடங்கினர். வீட்டிலிருந்து 100 காலடி தூரத்தில் தம் நண்பராகிய எமர்ஸன் தங்கிப் படிக்க அழகிய, ஆளுல் விளுேதமான வீட்டைக் கட்டத் தொடங்கினுர். இந்த விஷயத்தில் எவ்வித மாதிரி வரைபடமோ திட்டமோ இல்லாமல், ஒவ்வொரு பகுதியும் முடிந்த முறையை வைத் துக் கொண்டு அடுத்து எவ்வாறு செய்யலாம் என நினைப்ப தும், வளைந்து நிற்கும் கிளேயின் காரணமாகக் கட்டட அமைப்பையே மாற்றுவதும், இவ்வேலைக்கு உதவ வந்த தோரோவுக்குப் பிடிக்கவில்லை. அவர் ஒரு சமயம் நான் ஒன்றுமே செய்யாமல் இருப்பதாகத் தோன்றுகிறது ... ... என்று கூறினர். தோரோ ஆணி அடிக்கும் அலுவலை மேற்கொண்டாலும், அதனைச் செம்மையாகச் செய்தார். ஆணுல் இரவாணத்தை அழகுபடுத்துவதற்காகத் ஆல்காட் அவற்றை மேல்நோக்கி வளைத்து விட்டார். கூரைமேல் வெல்வெட் பாசியையும், ஸ்பாக்னம் புல்லுருவி யையும் படரவிட்டார். விரைவில் இயற்கை அதனே உண்டு விட்டது. உண்மையில் அவ்வீடு கட்டடக் கலைஞர் கையிலிருந்து தம் கைக்கு வந்தவுடன், திருமதி எமர்ஸன் அவ்வீட்டுக்கு அழிவுச் சின்னம் எனப் பெயர் சூட்டினர். வீடு கட்டியவருக்கும் (ஆல்காட்) அவருக்கு உதவி செய்தவருக்கும் (தோரோ) இடையே கடுமையான வேற்றுமை இருந்து வந்தது. உலகியல்பு நீங்கிய உயர் வாளரான ஆல்காட் எப்பொழுதுமே உலகியலுக்கு அப் பாற்பட்ட கனவு காண்பவராகவே இருந்தார். பழக்காடுஎன்ற இந்த வீட்டைக் கட்டுவதற்கு முன்னரேகூட அவர் பயனற்ற பல சோதனைகளில் ஈடுபட்டிருந்தார். தோரோ மிகவும் உலகியல் நிறைந்தவர்; உறுதியும், கட்டுப்பாடும் உடையவர். ஒரு வீட்டைத் தயாரிப்பதிலோ, ஒரு பன்ன யை அளவை செய்வதிலோ, ஒரு புதிய இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதிலோ, எதிலும் வல்லமையுடையவர் சுருங் கக் கூறினுல் எமர்ஸன் தம் அன்ருட அலுவலைப் பன்னிரண்டு, மாதமும் அவரிடத்தில் துணிந்து ஒப்புவிப்பார்; காங்க்கார்டு கிராமத்திலுள்ள ஏனையோருக்கு ஹென்றியிடம் நம்பிக்கை இல்லை; காட்டை நெருப்புக்கு இரையாக்கினவர் 60