பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே அவரைப் பலரும் கருதினர். அவருடைய பெற். ருேர்களுக்கும் அவர் ஒரு புதிராகவும், ஏமாற்றமாகவும் இருந்தார். பழைய மரபை ஒட்டிய அவருடைய அத்தை மார்களே நல்லெண்ணத்துடன் கேலி செய்து வந்தார்: ஒரு முறை கோடை வீட்டின் கூரையிலிருந்து ஹென்றி கீழே விழுந்துவிட்டார் ; நல்ல வேளேயாக வைக்கோலின் மேல் வீழ்ந்ததால் காயம் படாமல் தப்பிஞர். உலகியல் கடந்த தோரோவின் நண்பர்கள் கனவுலகத்திலிருந்து கீழே விழும்பொழுது இதுபோன்ற மென்மையான வைக் கோல் படுக்கை கிடைக்குமென்று நான் நம்புகிறேன்-- என்று தோரோவின் அத்தை மேரியா தம் மன உளைக் ச8லத் தெரிவித்தார். - சுதந்தரமானதும், கடினமானதுமான வால்டன் வாழ்க்கையிலிருந்து, தோரோவே கூறும்படியான துடைத் தலும், துலக்குதலும், வரி கட்டுதலும், வீடு காத்தலும்:ஆகிய கடமைகள் நிறைந்த எமர்ஸன் வீட்டு வாழ்க்கையில் ஈடுபட்டாலுங்கூடக் காட்டுடனும், வயல்களுடனும் அடிக் கடி அவர் தொடர்பு கொள்ளாதிருந்திருப்பின் தோரோ வின் வாழ்க்கை மிகச் சங்கடமானதாக இருந்திருக்கும். அடிக்கடி காட்டிற்குச் செல்லும் பழக்கத்தை வாணுள் முழுவதும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தார் அவர். வாரத்தில் பல நாட்கள் என்ற முறையில், ஆண்டு முழு வதும், மாலையில் பல மணி நேரம் வெளியிற் செல்வதே அவருக்குச் சிந்திக்கவும்,உற்று நோக்கவும் வாய்ப்பளித்தது. வீட்டு வாழ்க்கையில் காணப்படும் அற்பத் தனங்களே மனத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காகத் தினசரி மூன்று மைல் நடந்து சென்று தமக்குப் பழக்கமான குன்றின் சரிவுக்குச் செல்வார். ரிச்சர்ட் ஜெஃப்ரீஸைப் போலத் தோரோவும் தனிப்பட்ட இடத்திற்குச் செல்லும்பொழுது தான் நல்லறிவு பெற்ருர். சில சமயங்களில் சாலே வழியாக வும், பல சமயங்களில் வயல்களேயும் காட்டையும் குறுக்கே கடந்தும், மிக வேகமாக அவர் செல்வதுண்டு. அவ்வாறு அவர் செல்வது அநேகமாக ஒருவருக்கும் தெரிவதில்லை. “ஒவ்வொரு ஜன்னலேயும் ஒர் ஆப்பிள் மரத்தால் மறைத்து விட்டு அவர் தாம் விரும்பிய தனி இடத்துக்குச் சென்று, விடுவார். 61