பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டின் வெளியே இவ்வாறு சுற்றி அலைவதுதான் அவருடைய வாழ்க்கைக்கும், எழுத்திற்கும் கிளர்ச்சி யூட்டிற்று. அன்ருடம் சென்ற வழியே சென்ருலுங்கூடப் புதிய காட்சிகளைக் காணவும், புதிய சிந்தனைகளைப் பெற வும் வாய்ப்புப் பெற்றிருந்தார். அவரு ை வீட்டு வாயி லில் இருந்த புல்வெளியைக்கூட, ஒருநாள் கூர்ந்து கவனிக் கின்றவரை அவர் காண முடியவில்லை. அடுத்த வாரத்தி லேயே அப்புல்வெளி உரு மாறி விடும்; மறுபடியும் அது பற்றி ஆராய வேண்டியதுதான். மென்மையாக விரியும் அந்தப் பிரதேசத்தில், எந்த ஆற்றை, திட்டை, சதுப்பு நிலத்தை, குன்றை, எவ்வளவு குளிர்காலத்தில் அவர் காணச் சென்ருலும் பல பக்கங்கள் குறிப்பெழுதிக் கொண்டே மீள்வார் ; அன்றிரவே அதனைப் பிரதி செய்து மறுநாள் அதுபற்றிப் பல வாக்கியங்கள் எழுதி விடுவார். இத்தகைய முயற்சியில் தடை ஏற்படாமல், எப் பொழுதும் ஒர் உற்சாகத்துடன் சிறு குறிப்புகளைப் பெரு வாக்கியங்களாகப் பெயர்த்து எழுதியதுதான் அவருடைய வாழ்க்கையில் செய்த பெரிய சாதனை. இயற்கை ஆராய்ச்சி யைக் காட்டிலும் முக்கியமானது இது. இயற்கைவாதிகளின் பயிற்சியைவிட மிக நீண்டதும், ஆழமானதுமான முயற்சி யாகும் இது. இதல்ை மிகப் பரந்துபட்ட ஒரு காட்சியைக் அவர் காண முடிந்தது. காங்க்கார்டின் அபூத தத்துவஞானி களில் தோரோவும் ஒருவராக இருப்பினும், அவர் மட்டும் தன்னிச்சையுடன் கூடிய சுதந்தரமுடையவராகவே இருந் தார். அடிக்கடி ஜெர்மானிய, ஹிந்து சமய நூல்களைக் கற்ருலும், "அகண்ட ஆன்மாவோடு தொடர்பு கொள்ள: வேண்டும் என்று அடிக்கடி அவருள் ஒரு விருப்பம் ஏற்பட் டாலும், இத்தகைய மெய்யுணர்வில் அதிக தூரம் செல்ல முடியாத அளவுக்கு அவர் ஒர் அமெரிக்கராகவும் (யாங்கி), இயற்கைவாதியாகவும் இருந்தார். இயற்கையிடம் அவர் அணுகிய முறையே சொந்த முறையிலாகும். கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தாராயினும், அவர் கவனித்தவை யாவை என்பது முக்கியமன்று; அ.ே ரால் கவனிக்கப்பட்ட பொருள்கள் எவ்வாறு அவருடைய மனத்திற் பதிந்தன என்பதே முக்கியமாகும். இயற்கையும், மனிதனுடைய உணர்ச்சிகளும் ஓயாமல் மாறும் இயல் புடையனவாதலின், அத்துறையில் ஒவ்வொரு மணி 62