பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்து வரும் எழுது கோல்களுடன் போட்டி போட்டு அவற்றை விற்கும் தொல்லையை அந்த நேரத்திலாவது, மறந்திருந்தார். ஆனால், அமைதியான இந்த மனிதர், பென்சில் செய்வது பற்றியோ, அன்றிக் காட்டில் உலாப் போவது பற்றியோ என்ன நினைத்தார் என்று ந ம க் கு ஒன்றுந் தெரியாது. நூல்களைப் படிப்பதையும், பிறர் பேசு வதைக் கேட்பதையும் அவர் விரும்பினரே தவிர, தாம் பேசுவதை அவர் அதிகம் மேற்கொள்ளவில்லை. வேலையில் ஈடுபடாத நேரத்தில் ஜான் தோரோ செய்தித் தாள்களைப் படிப்பார், அல்லது காங்க்கார்டு மக்கள் கூடி அரட்டை அடிக்கும் மில் டேம் என்ற இடத்தில் பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு பொழுது போக்குவார். அந்த ஊரில் உள்ள பிறரைக் காட்டிலும் அதிகமாக, அண்டை அயலா ரைப்பற்றி அவர் அறிந்து கொண்டார். பிற்காலத்தில் ஹென்றி தோரோ தம் நாட்குறிப்பில் நன்றிப் பெருக்குடன் குறித்தபடி, இத்தகைய விஷயங்களில் ஜான் தோரோவின் நினைவாற்றல் மிகச் சிறந்ததாக இருந்தது. - ஜான் தோரோ, அவர் பெயருக்கு ஏற்ப, பிரெஞ்சு மக் கள் வழி வந்தவர். அவருடைய மிகப் பழைய மூதாதையர் கள் பிரெஞ்சு நாட்டினராக இருப்பினும், நெருங்கிய முன் ஞேர்கள் ஜர்ஸியிலுள்ள சேனர்த் தீவின் துறைமுகப்பட்டின மான ஸென்ட் ஹெலியரைச் சேர்ந்தவர்கள். ஜானின் தந்தையார் ஸென்ட் ஹெலியரில் வாழ்ந்த ஒரு மது வியா பாரியின் மகனுவார். அவர் 1773 இல் அமெரிக்காவில் குடி யேறி, பாஸ்டனில் ஒரு வியாபாரியாகத் தங்கினர். நாளுக்கு நாள் வாணிகம் பெருகிக்கொண்டு வந்த அந்த ஊரில் ஏனய வணிகரைப்போலவே அவரும் வளம்பெற்ருர். ஜர்ஸியைச் சேர்ந்தவரான இவர் வாழ்நாள் முழுதும் கடல், தீவு என்ற இடங்களில் வாழ்ந்தவராயினும் இறுதியில் அமைதியான காங்க்கார்டு கிராமத்தில் ஒய்வு பெறுவதற் காக வந்து தங்கிவிட்டார். தோரோ குடும்பத்தைப் பற்றி ... -யிருந்த எலும் புருக்கி நோய்க்கு இவரும் இலக்காகி 1801 இல் காங்க்கார்டில் காலமார்ை. ஜான் இவரிடமிருந்து நிறைந்த செல்வத்தைப் பெற்ருலும், வாணிகப் பண்பைப் பெருமை யின், பல்வேறு வாணிகத் துறைகளில் தம் செல்வத்தை இழந்தார். 1812 இல் ஸிந்த்யா டன்பார் என்பவரை மணந்தார்; இவர்கட்கு நான்கு மக்கள் பிறந்தனர். சில 3