பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் என்னவெனில் அது அவரை என் சொந்த நிலத்தி லேயே நீண்ட காலம் வாழுமாறு செய்து பூமியிலேயே இந்தக் குறிப்பிட்ட இடத்தை அதிகம் அறியுமாறு செய்தது: என்கிருர். வாழ்க்கையில் ஆழ்ந்த அறிவைப் பெற வேண்டும் என அவர் விரும்பியது, குறிப்பிட்ட அந்தச் சிறிய இடத் திலேயே மிக ஆழ்ந்து பொருள்களைக் கவனிக்குமாறு அவ ரைச் செய்தது. ஒருவன் தன்னுடைய நாட்டிலேயே அல்லது தன் சொந்த ஊரிலேயே சுற்றித் திரிந்து, தன்னு டைய வீட்டுக் கதவுக்கும் வெளிவாசலுக்கும் இடையே உள்ள பொருள்களே மட்டும் ஆராய வேண்டுமானுற்கூட அவன் பெரிய அறிவாளியாக இருத்தல் வேண்டும். ஒரு வன் வலிமையுடைய பணக்காரனுகவும் இருக்க வேண்டு மால்ை, அது அவன் சொந்த ஊரில் தான் சிறப்புடையது: என்று அவர் கூறியுள்ளார். பெரும் புல்வெளிகளுக்கோ, அன்றி ராக்கீஸ் எனப்படும் மலேப் பிரதேசங்கட்கோ அவர் செல்லத் தேவையில்லே ; ஏனெனில் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தொடங்கவே பல ஆண்டுகளாகும். கலிபோர்னியாவுக்கு நான் செல்வதாக இருந்தால் அங் குள்ள பெரிய மரங்களைக் காட்டிலும் என்னைப் பொறுத்த வரை காங்க்கார்டு கிராமத்திலிருக்கும் கிளைப் பயிர்கள் மிகவும் முக்கியமானவை என்று கூறியுள்ளார் அவர். ஒரு மனிதன் தன் முயற்சிகளின் காரணமாக இயற்கையிலிருந்து நேரடியாகக் கற்பதுதான் மிகச் சிறந்த கல்வி ; பிறர் கற்றுக் கொடுத்தோ அன்றித் தானே படித்தோ வரும் அறிவு இரண்டாந்தரமானதுதான். நேரடியாகக் கூர்ந்து கவனிப்பதைக் காட்டிலும் ஏட்டுக் கல்வி உயர்ந்ததாகாது. "இந்த வயல்களும், ஓடைகளும், காடுகளும், இங்கு வாழும் மக்கள் மேற்கொண்டுள்ள எளிய தொழில்களும் எனக்கு உற்சாகத்தை ஊட்டவில்லையானல், அதல்ை ஏற்படும் நஷ்டத்தை, எந்தப் பண்பாடும், செல்வமும் ஈடு செய்ய முடியாகு: என்றும் கூறியுள்ளார். . ஒரு புதுமாதிரியான இயற்கை வரலரற்றைத் தோரோ எழுதி வந்தார். இதுபற்றிக் கூற வந்த ஆல்காட் அது காங்க்கார்டின் பூகோளப் படமாகும் (அட்லாஸ்); இதன் எழுதுவதற்குரிய பேராற்றலும், விஷயங்களும் தோரோ விடம் நிரம்ப உண்டு என்று கூறியுள்ளார். தோரோ பிறப்பிலேயே ஒரு நில நூல் வல்லுநராவார். இதுபற்றிக் 64.