பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடம் செல்லும் பிள்ளைகளை அங்குப் போகாமல் தடுத்துத் தங்களுடன் ஹக்கிள் பெரிப் பழங்கள் பொறுக்க அழைத்துச் செல்வார்களா?... ... அவ்வாறு இருக்கையில் என்னுடைய பள்ளிக்கூடத்தையும், பள்ளிக்கூட நேரத்தையும், இவர்கள் ஏன் மதித்துப் பாராட்டக் கூடாது? வேண்டுமானுல் என் னிடம் சில டாலர்களேயாவது கேட்கலாம்; ஆனல் என் னுடைய மத்தியான நேரத்தை மட்டும் கேட்காதீர்கள்: என்றும் குறை கூறியுள்ளார். பிறருடன் இருக்கும் பொழுதுங் கூட இயற்கையைக் கூர்ந்து கவனிக்கலாமென்ருலும், அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமானல் தனிமை யாகத் தான் இருக்க வேண்டும் என்தை அவர் கண்டார். விப்-பூர்-வில்லை என்ற பறவைகளேயும், கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இக்னுேமிஞடே என்ற பிராணியை யும், ஆமையையும், மரத்தில் வாழும் தேரையையும் கண்டு வியக்க வேண்டுமானுல் அதற்குத் தனிமை தேவைப் பட்டது. ஆளுல் இயற்கையொடு நெருங்கி உறவாட, மக்களை விட்டு ஒதுங்கிச் செல்ல நேர்வதற்காக அவர் ஒரளவு வருந்தியதுமுண்டு தான். 1848, ஜூலை மாதத்தில் எமர்ஸன், இங்கிலாந்தில் தம் சொற்பொழிவு யாத்திரையை முடித்துக்கொண்டு திரும்பி யதும், தோரோ தம் குடும்பத் தாருடன் வாழத் துவங்கினர். அவர்கள் இப்பொழுது முக்கியமான தெருவில் விசாலமான தும், மஞ்சள் நிறமுடையதுமான வீட்டில் குடியேறினர். இந்த வீட்டில்தான் அவருடைய வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதையும் கழித்தார். அவர் குடும்பத்தார் மேற்கொண்டு நடத்திய பென்சில் தொழில் மேலும் நடந்து வந்தது. அதன் வளர்ச்சிக்கு ஹென்றியும் அவர் தந்தை யாரும் தம்முடைய புதியன புனையும் ஆற்றலால் மிகுதியும் உதவினர். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் பென்சில் உற்பத்தித் தொழிலே விட்டு விட்டு, அதிக இலாபந் தருவ தாகிய உயர் ரக கிராபைட் தூள் வியாபாரத்தை மேற் கொண்டனர். இது நாளாவட்டத்தில் மிகு கியான வளத் தைத் தந்தது. அவருடைய வாழ்க்கையிலும் ஒரு நிலை யான வாலாயம் ஏற்பட்டது. காலே நேரங்களை, கிராபைட் துTள் கடை, எழுதும் அயை, நில அளவுத் தொழில் என்பவற்றிற்குப் பகிர்ந்து கொண்டார். ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக நில அளவைக்குரிய சில கருவிகளை წ6