பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் வைந்திருந்தார். உள்ளுர்க் குடியானவர்களும் நிலக்கிழார்களும் நாளாவட்டத்தில் அவருடைய தயவை நாடத் தொடங்கியமையின், சமீப காலத்தில் அதிகப்படி யான கருவிகள் பலவற்றை வாங்கிச் சேகரித்துக் கொண் டார். பல நாட்கள் தனித்தும், சில நேரங்கள் சேனிங் அல்லது எமர்ஸன் போன்ற நண்பர்களோடும், சில சமயங்களில் குடும்பத்தோடும் மாலே வேளைகளில் வெளியே சென்று வந்தார். சில மாலை நேரங்களே இத்தகைய கூட்டத்திலும் பல மாலைகளே எழுதுவதிலும் படிப்பதி லும் செலவழித்தார். ஹார்வார்டு பல்கலைக் கழக நூல கத்திலிருந்து விடாமல் நூல்கள் வாங்கி வந்தார். தத்து வம், கவிதை என்பவை போக, பண்ணே வைத்தல், நில நூல், மானிட இயல் ஆகியவைபற்றியும் படிக்கத் தொடங்கித் தம் அறிவுத் துறையை வளர்த்துக் கொண் டார். சிவப்பு இந்தியர் பற்றிய ஒரு நூல் எழுத விரும் பினமையின் மானிட இயல் படிக்கத் தொடங்கினர். ஆளுல், என்ருவது தாம் ஒர் எழுத்தாளராக ஆக முடியுமா என்று அவர் ஐயங் கொள்ளக் காரணம் இருந்தது. எமர்ஸனுடைய, முயற்சி இருந்துங்கூட காங்க் கார்டில் ஒரு வாரம்’ என்ற நூலுக்கு ஒரு வெளியீட்டா ளரைக் காண முடியவில்லை. செலவு செய்வதில் சிக்கன முடையவரான தோரோ இப்பொழுது ஒரளவு பணம் சேர்த்து வைத் திருந்தார். சென்ற ஐந்தாண்டுகளாகவே என் உடல் உழைப்பு ஒன்றிேைலயே என் வாழ்க் கைச் செலவைச் சம்பாதித்து வருகிறேன் என்று அவர் எழுதியுள்ளார். இப்பொழுதுங்கூட ஹொரேஸ் க்ரீலி மூலமாக அவர் சில சாமான்களை விற்ருர். எனவே, எமர்ஸ்னுடைய அறிவுரையின் பேரில் காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூலைத் தம் சொந்தச் செலவில் வெளி யிட முடிவு செய்தார். 1849 இளவேனிற் பருவத்தில் அந் நூல் வெளி வந்தது. ந்யூயார்க் ட்ரிப்யூன் பத்திரிகை யின் ஆசிரியரான ஹொரேஸ் க்ரிலியின் வேண்டுகோட் கிணங்கி காங்க்கார்டு கிராமத்தைச் சேர்ந்த ஜ்யார்ஜ் ரிப்லே அந் நூலே விமர்சனம் செய்தார். உலகியல் கடந்தவர்களிடமும், சிறப்பாகத் 1ே ரிே விடமும் அதி: நம்பிக்கை கொண்டிருந்தார் க்ரீல. நூலில் காணப்பட்ட இயற்கை வருணனைகளே மிகவும் பாராட்டிய ரிப்லே 67