பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 6 'சமுதாயமா?...... ... பைன் மரங்களிற் காணப்படுவது போல் கிறைந்த மணம் அச்சமுதாயத்தில் காணப்படுவ தில்லையே பரந்த புல்வெளிகளில் உள்ளதுபோல் வாழ்க்கையில் ஊடுருவிப் புத்துணர்ச்சி ஊட்டக் கூடிய நன்மணம் எதுவும் சமுதாய்த்தில் இல்லையே!” தோரோ : மெஸ்சூளிட்ஸின் இயற்கை வரலாறு. தோரோவின் முதல் வெளியீடு தோல்வியுற்றதில் வியப்பு. ஒன்றும் இல்லை. நூலின் தலைப்போ காங்க்கார்ட், மெர்ரி மாக் ஆறுகளில் ஒருவாரம்: என்பதாகும். பிரயாணம்,. வீரச் செயல்கள் என்பவற்றை இத்தகைய தலைப்பில் எதிர் பார்த்தவர்கட்கு ஏமாற்றமே கிட்டியது. ஏனென்ருல் ஒரு வாரம் என்பது பல ஆண்டுகளாக இடை இடையே ஆசிரியர் எழுதியவையும் சிந்தித்தவையுமாகும். காங்க் கார்ட்டு, மெர்ரிமாக் ஆறுகளைப் பின்னணியாகக் கொண்டு மிக நீண்ட தத்துவ விசாரணையையும் உள்ளுர் வரலாற்றை யும் எழுதியுள்ளார். சில ஆண்டுகட்கு முன்னர் மார்கரெட் ஃபுல்லர் என்பவர் இலியனுய், விஸ்கான்ஸின் ஆகிய இடங் கட்குச் சென்றுவிட்டு ஏரிகளில் கோடைக்காலம்' என்ற நூலே எழுதினர். பிரயாண நூல் என்ற பெயருக்குத் தொடர் பில்லாத பாட்டல்கள், பல்வேறு சிந்தனைகள் என்பவற்றை அதில் காணலாம். தோரோ நூலுக்கு இப்புத்தகம் (ஏரி களில் கோடைக்காலம்) முன் மாதிரியாக அமைந்திருக்க லாம். தோரோவின் கட்டுரைகள் படிப்பவர்கட்கு அதிகக் கஷ்டமாகவோ, அன்றி அவர்கள் சக்திக்கு மேற்பட்ட தாகவோ இருந்ததை அவர் அறிவார். புத் தகங்கள் மகிழ்ச்சி ஊட்டுபவையாய் இருக்க வேண்டியதில்லை. ஒவ் வொரு கருத்தும் தைரியமாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். சோம்பேறி படிக்க முடியாததாய், மனத் திடம் இல்லாதவனுக்குப் பொழுதுபோக்காக அமையாததாய். அப்பொழுது நிலைத்துள்ள நிறுவனங்கள் கண்டு அஞ்சுவ தாய் அமைவதே நல்ல புத்தகங்கள் என்று நான் நினைக் கிறேன்- என்று கூறியுள்ளார். 69