பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்று கொண்டிருந்தது. அது விரைவில் குளிர்வதற்காக நாங்கள் அப்பழத்தில் இட்டிருந்த துவாரத்தின் வழியே தண்ணிர்கூட உட்புகவில்லே.-- 'காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூல் பல ஆண்டு களக வளர்ந்து வந்தது. ஆற்றுப் பயணம் 1839 இல் நடந்தது. வால்டனில் தங்கி இருந்த காலத்தில் பழைய நாட்குறிப்பை வைத்துக் கொஞ்சங் கொஞ்சமாக 1846 இல் எழுதப் பெற்றது. 1849 இல் அது வெளியிடப்படுகின்ற வரை ஓயாத பெயர்த்து எழுதலுக்கும் திருத் தத்துக்கும் உள்ளாயிற்று. வால்டனில் கிடைத்த சாவகாசமான ஏகாந்த வாழ்க்கையால் கிடைத்த தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியான மனமும் இன்ப உணர்வும் இதில் பிரதி பலிக்கின்றன. அங்கேதான் அவர் தம்மைத் தாமே அறிந்து, தம்மிடம் நம்பிக்கை கொள்ளவும் தொடங்கினர். தம் வாழ்க்கை, மக்கள் நிறுவனங்களுடன் மாறுபட்டாலும் ஆழத்தில் உண்மையுடன் ஒத்துப் போகின்றது என்பதை யும் அங்கேதான் கண்டார். மேகம் மூடிய நேரங்களில் ஒவ்வொரு சமயம் சூரிய ஒளி வயல்களின் மேல் வேகமாக ஒடிச் செல்வதுபோல மிக உயர்ந்த எண்ணங்கள் தம்மேல் படிந்து செல்வதை உணர்ந்தார். வால்டனில் வாழும் பொழுது இந்த நூலே எழுதுவதற்கு வேண்டிய ஒய்வைப் பெறுவதற்காக இரண்டாம் வசந்த காலத்தில் பீன்ஸ் பயிரிடுதலேக் கூடக் குறைத்துக் கொண்டார். ஆனல் அதற்குப் பதிலாக "உண்மை, பரிவு, எளிமை, நம்பிக்கை, வஞ்சகமின்மை: என்பவற்றை நிரம்ப விளேத்தார். அவருடைய இலக்கிய சக்தியில் உச்ச நிலையை அடைந்து தமக்கே உரிய சுதந்திர வழியையும் அப்பொழுது வகுத்துக் கொண்டார். அவர் எழுத முனைந்தால் சொற்கள் தாமாக வந்து விழுவதைக் கண்டவுடன், தாம் உண்மையில் ஓர் எழுத்தாளராகப் போவதை, பிற்காலத்தில் காணுத முறை 'யில் தெளிவாகக் கண்டார். வாழ்க்கையில் திருப்தி அடைந்த ஒரு மனிதனின் மனநிலைமையையும் காண்கிருேம் "காங்க்கார்டில் ஒரு வாரம்" என்ற நாலில், சாதாரண மனி தன் இந்த உலகின் அழகில் ஈடுபடுவதைக் காட்டிலும் அதிகமாக ஈடுபட்ட ஒரு மேதையைத் தான் அந்த நூலில் காண்கிருேம். அவரை மிகுதியும் கவர்ந்த உள்ளுர் ஒடை யை வருணிக்கும்போது வருனனைத் திறன் உச்ச நிலையை 71