பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைகிறது : 'கொஞ்சங் கொஞ்சமாகக் கிராமத்தின் சல சலப்பு அடங்குகிறது. கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற தோற்றம்-சென்ற காலத்திலிருந்து எதிர்காலத்துக்குச் சாலே யில் விழித்தெழுவதைப் போல் செல்கிருேம். ஏதும் ஒசைப் படாமல் படகில் அமர்ந்து ஒடை செல்லும் வழியே செல் கிருேம். ஏதோ ஒரு நேரத்தில் பீக்கரில் என்ற மீனே அல்லது ப்ரீம் என்ற மீனே குறுக்கே வருகிறது. கொக்கின் இனத்தைச் சேர்ந்த பிட்டர்ன் என்ற சிறு பறவை மிகச் சோம்பலுடன் பறந்து கரையை அடைகிறது. அல்லது பெரிய பிட்டர்ன் பறவை புல்லில் அமர்திருந்தது போக, நம் வரவால் மிரண்டு தன் கால்களைத் துக்கிப் பறந்து சென்று பாதுகாவலான பிறிதோர் இடத்தில் அமரச் செல் கிறது. நம்முடைய படகு செல்வதால் ஏற்படும் சிறு அலை கள் காரணமாக, மரங்களின் பிம்பம் முறிந்து விடுவதுடன் ஆமைகளும் நீருக்குள் புகுந்து விடுகின்றன. கரைகள் அழகு மிகுந்திருந்த நிலை மாறிவிட்டது , ஒளி பொருந்திய மலர்கள் மெள்ள வாடிவிட்ட நிலை, அந்த ஆண்டிற்குக் கிழப்பருவம் வந்துவிட்டதை நினைவூட்டுகிறது. பருவம் கடந்து விட்டமையின் ஆற்று மலர்களின் அரசி போன்ற நீர் அல்லியை நாங்கள் காண முடியவில்லை. ஒருவேளே அவருடைய நீர்ப்பயணம் மிகவும் காலதாமதப்பட்டு நடை பெற்றது போலும். நம்முடைய காங்க்கார்டு நீரில் இந்த இனம் மிகுதியாக உள்ளன. ஒரு கோடை நாளில் விடிவ தற்கு முன்னர் நான் இந்த ஒடையில் சென்றுள்ளேன். அப் பொழுது இரு மருங்கிலும் காடுபோல் மண்டிக் கிடந்த அல்லி மலர்கள் உறங்கிக் கிடந்தன. கரை முகட்டில் கதிர வன் வந்து அவனுடைய கதிர்கள் பட்ட மாத்திரத்தில் இம் மலர்க்காடு கண் விழித்ததைப்போல் மலர்கள் விரிகின்றன. கொடி பறக்க விட்டதுபோல் விரிகின்ற இம் மலர்கள், கதிர வன் ஒளியிடம் மிகவும் உறவு கொண்டுள்ளன.” என்ருலும் நூலில் பல இடங்களில் காணப்படும் இந்த நடை அடிக்கடி முறிந்து, வால்டனில் காணப்படும் பொறுமை இழந்த கடிய நடை வந்து விடுகிறது. தம் தனித்தன்மையும், என்ன உரிமையும் வாலாயமாக இருந்து வரும் சமய, நீதிச் சட்டங்களால் பாதிக்கப்பட்டன என்று தோரோ கருதும்பொழுது வால்டனில் காணப்பட்ட “எல்லா முரட்டுத்தனத்தையும் விரும்பும் இயல்பு அவ 72