பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிடம் வந்து விடுகிறது. அதைத் தடுக்க முடியாது. ஹப்ருக்கனின் கடவுளே வணங்கியதுபோகத் தோரோ *பேன் என்ற புல்வெளியின் கடவுளே வழிபடத் தொடங் கினர். அந்தக் கடவுள் வால்டன் காட்டில் தம் தூய்மை யுடன், உருண்ட முகத்துடனும், நீண்ட தாடியுடனும், கட்டான உடம்புடனும் தம் குழலுடனும், கவட்டைக் கோலுடனும் ஆட்சி புரிவதாகக் கருதிஞர். 'பேன்’ தெய்வத்தை வழிபடுவதுடன் இந்தியாவின் தத்துவ சாத் திரங்கட்கும் அதிக மதிப்புக் கொடுத்தார். மேட்ைடினர் காண முடியாத ஆழமும் அகலமும் இந்தியத் தத்துவ சாத்திரங்களில் இருப்பதாகக் கருதினர். "அண்டங்களின் ஆக்கம் பற்றிய தத்துவத்தைக் கூறும் பகவத் கீதையின் எதிரே நம்முடைய ஷேக்ஸ்பியர்கூடச் சில சமயங்களில் மிகவும் இளமையுடையவராய், அனுபவ மில்லாதவராய் வெறும் உலகியல் மட்டும் உடையவராய்க் காணப்படு கிருர் என்ருர் அவர். மரபு, நிறுவப்பட்ட அதிகாரம், முறைமை என்பவற்றை இவ்வாறு உதறிவிட்டதன் மூலம் அவர் எமர்ஸ்னைத் தொடர்பவராயினர். எமர்ஸனும் "நம் முடைய மூதாதையர்களின் இறந்துபட்டபழக்க வழக்கங்களே. மட்டும் வணங்குகிற மாதா கோயில் தமக்கு வேண்டாம் என ஒதுக்கி விட்டார். மேலும் உயிரற்ற, ஓய்ந்து போன கிறிஸ்தவ சமயத்தைக் காட்டிலும் ஸாக்ரடிஸ் முறையில் ஏற்படும் பல தெய்வ வழிபாடு கூடச் சிறந்தது: என நம்பி ர்ை. மிடில்செக்ஸில் உள்ள சமய போதகரைப் பார்த்து ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர் பேசும் மேடையிலிருந்து நான் பேச வேண்டும் என்று நான் கேட்டால், அவர் வழிபடுவதைப் போல நான் வழிபடுவ தில்லையாதலாலும், நான் தீகூைடி பெறவில்லை ஆதலாலும், அவர் எனக்கு இடம் தர மாட்டார். இப்பரந்த உலகில் இச் சடங்குகளின் பொருள்தான் என்ன ? என்று தோரோ ஒருமுறை எழுதினர். -- புரட்சி மனப்பான்மையில் சுடர் விடும் இதே மன நிலையுடன் தான், 1848 இன் முற்பகுதியில், எமர்ஸனின் வீட்டில், தம் அறையில் சிவில் ஒத்துழையாமை பற்றிய தம் கட்டுரையைத் தோரோ எழுதினர். அந்தக் கட்டுரை மகாத்மா காந்தியை ஊக்குவித்ததாகலின் இந்தியாவிலும் பிற இடங்களிலும் தோன்றிய சத்தியாக்கிரக இயக்கத் 73