பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகள் வரை, ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் அவர் கூடவே அவர் குடும்பமும் பாஸ்டனுக்கும் காங்க்கார்டுக் கும் இடையே அலைந்தது. அவருடைய உறவினர் ஒரு வரின் பண்ணையில், சில காலத்துக்கு மேலாளர் (பெய்லிப்) வேலே பார்த்து வந்தார். காங்க்கார்டை அடுத்த பகுதியில் அவர் தங்கி இருக்கும் பொழுதுதான், 1817 ஜூலை 12 ஆம் நாள் அவருடைய மூன்ருவது குழந்தை வால்டன் காட்டை. யடுத்த ஒரு வீட்டில் பிறந்தது. இக் குழந்தையின் பெயர் டேவிட் ஹென்றின் என்பதாகும். இவர் பிறந்த வீடு, சிறிது அப்ப்ால் நகர்த்தப்பட்டுவிட்டபோதிலும், இன்றும் இருந்து வருகிறது. - . . . . ஹென்றியின் தாயார், பலவிதங்களிலும் போற்றத் தகுந் தவராகவே இருந்திருத்தல் வேண்டும். அந்த அம்மையார் பழைய ஒரு மூதாதையிடமிருந்து போராடும் புண்பைத் தம் இரத்தத்திலேயே பெற்றிருந்தார். கர்னல் எலிஷா ஜோன்ஸ் என்ற இந்த மூதாதை, ஆங்கில அரசுக்கு அன்பு பாராட்டும் நிலப் பிரபுவாய், டோரிக் கட்சியாளராய் இருந்தார்; ஐக் கிய அமெரிக்க அதிகாரிகளுடன் ஓயாமல் சண்டையிட்டு வந்தார். இந்தப் பரம்பரைப் பண்பைப் பெற்றிருந்த இந்த அம்மையாரும் ஒரளவு அதிகாரம் செலுத்துபவராய், விரும் பாதவர்களை ஏசும் கூர்மையான நாவைப் படைத்தவராய் இருப்பினும், தாம் விரும்பி அழைத்த விருந்தினரைப் பெருந் தன்மையோடு போற்றும் பண்புடையவராய் இருந்தார். நேர்மையான பேச்சு, நேர்மையான நடவடிக்கை என்ப வற்றுடன் குடும்பம் நடத்தும் தலைவியாய் அமைந்தார். எதிலும் த்லைமை வகிக்கும் அவருடைய இயல்பும், யாரை யும் எடுத்தெறிந்து பேசும் அவருடைய நாவும், அவருடைய கணவரை ஓரளவு மந்தமடையச் செய்தன. ஹென்றியை" வீட்டை விட்டு வால்டன் ஆசிரமத்தில் குடிபுகுமாறும் செய்தது இந்த அம்மையாரின் வாய்தான். ஹென்றி, எதி லும் ஒதுங்கிவிடும் இயல்பையும், ஆழ்ந்து சிந்தனே செய்யும் இயல்பையும் தம் தந்தையிடமிருந்து பெற்ருர் , அவரு

  • அவருக்கு உண்மையில் டேவிட் ஹென்றி என்றுதான் பெயரிட் டனர். வீட்டில் ஹென்றி என்று அழைக்கப் பெற்ருலும், பிறர் அறியா மல், ஆளுல், அவர் மட்டும் அறிந்த ஏதோ ஒரு காரணத்திற்காக, எழுத்தாளராக ஆனவுடன் ஹென்றி டி. தோரோ எனப் பெயர் வைத் துக்கொண்டார். -

4