பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் மூல காரணங்களுள் இக்கட்டுரையும் ஒன்று என்று: கூறலாம். இக்கட்டுரை அரசாங்கத்தில் தனி மனிதனின் உரிமையும் கடமையும்’ என்ற பெயருடன் காங்க்கார்டு சொற்பொழிவு மண்டபத்தில் தோரோவால் படிக்கப் பெற்றது. புதுமை விரும்பும் எலிஸபெத் பீபாடி என்பவர் பாஸ்டனில் 1849இல் உலகியல் கடந்தோர் கட்டுரைத் தொகுப்பில் முருகியல் கட்டுரைகள்' என்ற பெயரில் இதனை வெளியிட்டார். இப்பொழுது அதே கட்டுரை உலகம் முழுவதிலும் சிவில் ஒத்துழையாமை என்ற பெயரில் வழங்குவதோடு, முரட்டுத் தனத்தை சாத் விகத்தால் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நம்பும் அனைவரும் கற்றும், மேற்கோளாக எடுத்துக் காட்டியும் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. வால்டனில்,கோடைக் காலத்தில், ஒரு நாள் மாலே தம் காலணியைப் பழுது பார்க்கக் குட்டையிலிருந்து காங்க் கார்டு கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார் தோரோ. அப்பொழுது அவர் செலுத்த வேண்டிய தலைவரியைக் கட்டவில்லை என்பதற்காக அவரைப் பிடித்துக் கிராமச் சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தை சிறையின் ஒர் அறையில் அவர் கழிக்க நேரிட்டது. மறுநாட் காலே உன விற்குப் பிறகு அவர் விடுதலே செய்யப்பெற்ருர். அவரைச் சேர்ந்தவர்களோ அன்றி அவர் குடும்பத்தாரோ அவர் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி விட்டனர் ; இது அவருக்குப் பிடிக்கவே இல்லை ; மிகச் சாதாரணமான இந்த நிகழ்ச்சி தோரோவைச் சிந்திக்குமாறு தூண்டிற்று. மிக அற்பமான நிகழ்ச்சிகள்பற்றிக் கூட ஆழ்ந்து சிந்தித்து, அதனடியிற் காணப்பெறும் கொள்கைகளே ஆராயும் மனத் தைப் படை த்திருந்தார் அவர். தனித்தே வாழ்ந்தமையின் தமக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை நீண்ட நாட்களாக ஆய்ந்தார். ஆல்ை, அந்தச் சமுதாயம் அவரை நேரடியாகவே தாக்க, அதன் விளைவாகச் சிறை யின் அறை ஒன்றில் ஒர் இரவைக் கழிக்க நேர்ந்த பிறகு தான், தனிப்பட்ட மனிதன் மேல் அரசாங்கம் எத்தகைய அதிகாரம் செலுத்த முடியும் என்பதை நேரிடையாக உணர்ந்தார். இறுதியாக இதுபற்றிய தம் கருத்துக்களே வரிசைப்படுத்தித் தெளிவாக அவர் உணர நேரிட்டது. 宁4