பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாய நலங்களாகிய சாலை போடுதல், கல்வி ஆகிய வற்றிற்கு வரி போடப்படுவதை அவர் ஏற்றுக் கொண் டார். அடக்கு முறை, சாம்ராஜ்யப் பெருக்கம் ஆகிய வற்றை விரும்பி அதற்காகத் தலைவரி போடுவதை அவரும் அவருடைய பரந்த மனப்பான்மையுள்ள நண்பர்களும் வெறுத்தனர். அடிமைகள் வைத் திருக்கும் பழக்கம் தெற்குப் பகுதிகளில் மட்டுமே இருந்தது எனினும், மெஸ் சூலிட்ஸ் உள்ளிட்ட வட பகுதிகளிலும் தப்பி ஓடி விடுபவர் சட்டம் அமலிலிருந்து வந்தது. இச்சட்டத்தின் படி தப்பி ஓடி வருகிற அடிமைகட்குப் புகலிடம் தருவதும், அவர்கள் வடக்கேயும் கானடாவிற்கும் செல்வதற்கு உதவி செய்வதும் கொடிய குற்றமாகக் கருதப் பெற்று அதற்குக் கடுந் தண்டனை விதிக்கப் பெற்றது. இச் சட்டப்படி ஓடி வரும் அடிமைகளைப் பிடித்து தெற்கில் உள்ள அவர்களின் யசமான ர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆளுல் வட பகுதிகளில் அடிமை ஒழிப்பு இயக்கம் வலுப் பெற்று வளர்ந்து வந்தது. தோரோ வீட்டாரும் இன்னும் அவர் கள் போன்ற பலரும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பேசிய துடன் தாங்களும் கையாண்டு வந்தனர். தலைவரி செலுத்த. மறுத்து ஆல்காட் 1843 இல் சிறை சென்று வந்தார். அவருடைய செய்கையால் உந்தப்பெற்றுத் தோரோ உள்ளிட்ட பலர் அவ்வாறு செய்தனர். அடிமைத் தனத்தை வெறுத்தது போலவே, நாடு பிடிக்கும் பேராசை யையும் இந்தப் புரட்சியாளர்கள் வெறுத்தனர். அமெ ரிக்கா, மெக்ஸிக்கோவுடன் போர் தொடுத்தது நாடு பிடிக் கும் ஆசைபற்றியே யாகும். சிவில் ஒத்துழையாமை என்ற நூலில் அடிமை வியாபாரம், படை, போர், அரசாங்கம், அரசியல்வாதிகள், சட்ட மன்ற உறுப்பினர், ஆகிய பல வற்றைப்பற்றித் தம் மறுப்பைத் தோரோ அறிவித்துள் ளார். நியாயமற்ற அரசாங்கத்துடன் தனிப்பட்ட மனித னின் மனச்சான்று செய்யும் போராட்டம் இது ; எல்லா அரசாங்கங்களும் நேர்மையற்றே இருந்தன என்றும் அவர் நம்பிளு ர்.

  • சட்டத்திற்கு எல்லேமீறி மரியாதை கொடுப்பதால் தான் போர் வீரர்கள் கர்னல், காப்டன், கார்ப்போரல், தனி வீரர்கள், துப்பாக்கி மருந்து எடுத்துச் செல்பவர் ஆகி யோர் தம்முடைய விருப்பத்துக்கு எதிராகவும், அணி

75