பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுத்தும் காடும் மலேயும் கடந்து செல்வதைப் பார்க்கிருேம் அவர்களுடய பகுத்தறிவும், மனச்சான்றுங்கூட அவ்வாறு அவர்கள் செல்வதை விரும்பவில்லை. அ வ ர் க ள் யார்? மனிதர்களா ? அ ல் ல து நகரக்கூடிய கோட்டைகளா? பண்பாடில்லாதவனும், அதிகாரம் வகிப்பவனும் ஆகிய ஒருவன் ஆணைக்குட்பட்டு இத்துணைப் பேரும் உள்ள னர்......... என்று அவர் எழுதுகிருர். அடுத்தபடியாக, *அரசாங்கமும் உன் மனச்சான்றும் எந்த நேரத்தில் மோத நேரிடும் எ ன் ப ைத அறிய முடியாதாகையால் உனக்குள்ளாகவே நீ வாழ்ந்தது உன்னேயே நம்பி இருந்து, உடனே புறப்படுவதற்கு எப்பொழுதும் தயாராக இரு” என்று அறவுரை கூறினர். தொட்டாற் சுருங்கிச் செடி எவ்வாறு மனிதருடைய விரல்கள் பட்டவுடன் உடனே சுருங்கி விடுகின்றதோ, அதேபோல நேர்மையற்ற சட்டங்களைக் கண்ட உடனே தோரோ மனம் மாறுப்பட் டார். பிறரால் கட்டுப்படுத்தப்பட நான் பிறக்கவில்லை ... ...என் விருப்பம் போலவே நான் மூச்சுவிடுவேன். ஒரு செடி தன் விருப்பம் போல் வளர முடியவில்லையானுல் இறந்துபடும்; மனிதனும் அவ்வாறே - என்ருர் அவர். சிவில் ஒத்துழையாமை என்ற நூலின் வலிமையான சாரம் முழுவதும் சிலவாய இச் சொற்களில் அடங்கியுள்ளன. விவாதம் நேரிடுகையில் தோரோவின் உயர்ந்த வாதத் திறமையைக் காணலாம். அறிவற்ற மனிதர்களால் ஆளப் படும்பொழுது மக்கள் எவ்வாறு ஆடுகள் போல் அடங்கிச் செல்கிருர்கள் என்பதை உபதேசம் செய்தல், இடியும் மின்னலும் போல முழக்குதல், ஆகிய எதுவுமின்றி இடித் துரைக்கின்ருர். - 1849 மே மாதத்தில் காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூலும், சிவில் ஒத்துழையாமை என்ற நூலும் வெளியாயின. அவர் ஹார்வார்டில் இருப்பதற்குரிய செலவைச் செய்த வரும், அவர்மாட்டு மிகுந்த அன்பு பூண்டவரும் ஆகிய அவருடைய மூத்த சோதரியார், இதே மாதத்தில், தம் 36 வது வயதில். என் புருக்கி நோயால் காலமாளுர். இதே ஆண்டில்தான் மெஸ்சூலிட்ஸில் உள்ள வொர்செஸ்டரைச் சேர்த்த ஹாரிஸன் ப்ளேக் என்பவருடன் தோரோவுக்கு நட்புத் தொடங்கியது. அவருடன் தம் இறுதிக் காலம் வரை மிக அதிகமான அளவில் தோரோ கடிதப் போக்கு 76