பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரத்துச் செய்தார். கேப் காட் என்ற காட்டுப் பிரதே சத்திற்கு எல்லரி சேனிங்குடன் முதன் முறையாகச் சென்று வந்தார். அப் பிரதேசத்தில் மிகவும் ஈடுபட்ட தோரோ ஒர் எழுத்தாளர் என்ற முறையில்அப் பகுதியைக் கூர்ந்து கவனித்து வந்தார். அவர் வெளியிட விரும்பிய இரண் டாவது நூலாகிய வால்டன்' என்ற நூலேச் செப்பஞ் செய் வதில் அதிக நேரஞ் செலவிட்டார். காங்க்கார்டில் ஒரு. வாரம் என்ற நூலே அடுத்து இந்நூல் வெளிவரும் என வெளியீட்டாளர் முன்னரே அறிவித் திருந்தனர். ஆணுல், இந்த நூலே வெளி யி டு ம் அவருடைய எண்ணம், சிதறிப் போக நேரிட்டது. அடுத்த ஐந்தாண் டுகள் வரை அந்த வெளியீட்டாளர்கள் (அவ்வாறு அவர் களைக் குறிப்பிடுவதே தவறு என அவர் கூறியுள்ளார்) *வால்டன்- என்ற நூலே வெளியிடாமல் நொண்டிச் சமா தானம் கூறி இறுதியில் வெளியிடாமலேயே வி ட் டு விட்டனர். வால்டனிலிருந்து மீண்டவுடன் அவர் பெற்றி ருந்த மனக் கிளர்ச்சியை இந்த ஏமாற்றம் கொஞ்சங்கொஞ் சமாக உண்டு விட்டது; இறுதியில் ஒரு நிராசை அவரிடம் நிறைந்து விட்டது. 1851 வாக்கில் அவருடைய நாட் குறிப்பில் இப்பொழுது எனக்கு 34 ஆண்டு ஆகிவிட்டது; என்ருலும் என் வாழ்க்கையைச் சிறிதும் பயன்படுத்த வில்லை என்று எழுதியுள்ளார். தம் வல்லமையையே ஐயங் கொள்ளும் இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் தம்மையே அற்பமாக மதித்தார். தம் இளமைக் காலத்தில் எல்லேயற்ற மசிழ்ச்சியுடன் வாழ்ந்த நிலைமையை இப்பொழுது நிஆனந்து பார்க்கத் தொடங்கினர். அ வ ரு ைட ய உடல்நிலையும் சரியாக இல்லை; அடிக்கடி மார்ச்சளி பற்றிக் கொண்டது. மகிழ்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் இடையே ஊசலாடி ஞர். கற்பனை மிகுந்துள்ள இவர் போன்றர் பலரும் இதே தொல்லைக்கு ஆளாயினர். . 1852 வாக்கில் மன உளைச்சல், அகமுக ஆராய்ச்சி ஆசியவற்றிலிருந்து ஒரு வாறு விடுபட்டார். கண்பர்களிடம் நெருங்கி இருப்பதாக உணர்ந்து அவர்கட்கு நிரம்ப எழுதி வந்தார் ; காங்க்கார்டில் பழைய மகிழ்ச்சியைப் பெற்ருர், " நான் மாலே நேரங்களில் உலாவச் செல்வதற்குப் பல மைல் நீளம் நிழலாக உள்ள சாலே இருக்கிறது. எத்தகைய 77