இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அகாஸி என்பவருடைய நட்பு, வால்டனில், தோரோவுக் குக் கிடைத்தது. அகாஸி ஒரு முறை வீட்டிற்குள் இருக்கும்பொழுது இயற்கைபற்றிப் படிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த இயற்கையைக் காண முடிவதில்லை என்று கூறியுள்ளார். எனினும், தோரோவின் தனி வன்மையைக் கண்டு அவரிடம் பெரு மதிப்புக் கொண்டிருந்ததோடு மீன்கள், ஆமைகள் ஆகியவற்றின் மாதிரிகளைத் தோரோவிடமிருந்து பெற்றுக் கொண்டார். 1850 இல் பாஸ்டன் நகர இயற்கை வரலாற்றுக் குழுவிற் குத் தோரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்ருண்டுகள் கழித்து விஞ்ஞான வளர்ச்சிக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனர். 80