பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 7 "மலர்கள் மொக்கு விரியும் நேரத்தில் அவற்றைக் காண்பதைக் காட்டிலும் உயர்ந்த வேலை வேறு இன்மையின், இரண்டு ஆண்டுகளே, மலர்களின் இடையிலேயே கழித்தேன்.' - --தோரோவின் நாட்குறிப்பு. டெகூரோடைப் என்று கூறப்படும் பழங்கால நிழற்பட முறையில் 1856 இல் எடுக்கப்பட்ட தோரோவின் படத் தான், அவர் நன்ருக வாழ்ந்த காலத்தில் இருந்த வடிவைக் காட்டுகிறது. 1855 இல் நீண்டகால நோய் காரணமாக அவருடைய உருவமே மாறிவிட்டது. ஒரு கோணத்திலி ருந்து பார்ப்பதைக் காட்டிலும், நேர்முகமாக அவரைப் பார்க்கும்பொழுது தான் அவருடைய வடிவழகை அறிய முடிகிறதென நண்பர்கள் கண்டனர் ; நேராக அவர் பார்க் கும்பொழுது, அடர்ந்த அவர் புருவங்களின் கீழுள்ள சாம்பல் நீல நிறமுடைய கண்கள், கூர்மையான பார்வை யைச் செலுத்தின. முகத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பார்க்கும்பொழுது, அவருடைய நீண்ட மூக்கு அதிக நீள மாகவும், தாடை வலுவற்றதாகவும் தோன்றின. அவரைப் பற்றி எழுதப் பெற்றுள்ள செய்திகள் பெரிதும் தம்முள் மாறுபடுகின்றன ; சிலருக்கு அவர் அழகே இல்லாதவராக வும், பலருக்கு, முகத்தில் காணப்பெற்ற அமைதி, சிந்தனே, உறுதி என்பவற்ருல் ஒரளவு அழகுடையவராகவும் காணப் பெற்ருர். அவர் நடுத்தர உயரத்திற்குக் குறைந்தவர். 34 வது வயதில் அவருடைய எடை 127 ராத்தல் தான். வீட் டின் வெளியே சென்று பணியில் ஈடுபடுவதற்குரிய உடல் வசதி இன்றேனும், அவர் பணிபுரியும் நேரத்தில் அவ ரைக் கண்டவர்கள் கவரப்பட்டனர். இயற்கை ஆராய்ச்சி யின்போது, வீசி நடந்தும், மார்பை முன் தள்ளியும், கை களே மடக்கிக்கொண்டும் வேலையில் ஈடுபட்டமையின் அந்த நேரத்தில் அவரைக கண்டவர்கள், அவருடைய வன்மையை அதிகமாகவே மதித்தனர். எனினும் அவரு டைய உடல்நிலை, என்றுமே வலிமையுடையதாக இருக்க 635ుడిu. 6 . 81