பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரோவைப்பற்றி எல்லரி சேனிங் எழுதியதும், அவருடைய நண்பர் ஃப். பி.லேன்பர்ன் ஒப்புக் கொண்டது மான ஒரு விவரக் குறிப்பைக் காட்டிலும் சிறந்தது வேருென்றும் இருக்க முடியாது : தோரோவின் உறுப்புக் கள் குறிப்பிடிக்கூடியவை ; அவருடைய மூக்கு எடுப்பாக, ரோமர்களுடையது போலவும் சீசரின் படத்திற் காணப்படு வதுபோலவும் இருந்தது...நெற்றி மிகவும் ஆழ்ந்த சக்தியை வெளிக் காட்டுவதாய் இருந்தது. தடித்த உதடுகள், கருத்துச் செறிவுடன், கொண்டதை முடிக்கும் வகையில் மேனேக்கி வளைந்திருந்தன... ...ஒரு விடிை கூட விணுக்க முடியாதவர் போன்று அவருடைய வடிவம் முழுவதும் சுரு சுருப்புடையதாய்க் காணப் பெற்றது... ... ' அநேகமாக அவருடைய வரலாற்றை எழுதிய ஆங்கிலேயரான ஹென்றி ஸ்ால்ட் அவர்பற்றிச் சுருக்கிக் கூறியதே முற்றிலும் பொருந்தும்போலும். அதிகத் துாரம் நடத்தல், பனியில் சறுக் கல், மரம் ஏறுதல், மரம் வெட்டுதல், மலே ஏறுதல், ஆழ்ந்த பனிக்கட்டியின் மேல் நடத்தல் ஆகிய காரியங்களேச் செய்ய மூல காரணமாயிருந்தது, அவருடைய வணங்காத மனத் திடமே தவிர, உடம்பின் தெம்பு அன்று. அவர், బ్రైబ్రీ குறிக்கோள்வாதியாக இருந்தமையின், தம் மனம் செல்லும் வேகத்துடன் உடலும் ஒத்துழைக்க வேண்டுமென, பிடிவாதப்படுத்துபவராக இருந்தார்.’’ என்று எழுதியுள்ளார். இக் கூற்றுக்குத் துணையாக டாக்டர் இ. டபிள்யூ. எமர்ஸனுடைய பிறப்பிலேயே மெலிந்த உடம்பு உடைய இவரைக் காட்டிலும் தொய்ந்த தோள்களையும் சுருங்கிய மார்பையும் உடைய ஒருவரைக் கண்டதில்லை. என்ருலும் உட்லால் செய்யப்படும் அனைத்தையும் அவர் செய்தார் என்ற தோரோவைப் பற்றிய சொற்களை மேற் கோளாக எடுத்துக் கூறுகிருர் சால்டர். கோாேவின் நால்களைப் படித்த பலரும், அவரை நேரிற் கண்டபொழுது, வலிமை பொருந்திய காட்டில் வாழும் மணி தனப் போல் அவர் இல்லாதது கண்டு பெரிதும் ஏமாற்ற முற்றனர். தோரோவின் பிற்கால வாழ்க்கையில் கிடைத்த நண்பராகவும், ஆன்மிக உறவுடையவராகவும் இருந்த டேனியல் ரிக்கெட்ஸன், தோரோ தம் இல்லத்துக்கு முதன் முறை வந்ததைப் பற்றிக் குறித்துள்ளார்: "தோரோ என்னை நெருங்கி வந்து, நீங்கள் என்னே அறியமாட்டீர்கள்: 82