பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ருர். உடனே என்னுடன் கடிதப் போக்குவரத்துச் செய்யும் மனிதர் இவரே என்பதும், வலுவான உடலமைப் புடைய ஒருவராக இவர் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்ததுபோக, மெலியவராகவும், தாழ்ந்த நிலையி லுள்ளவர் போலவும் இவர் இருக்கிருர் என்பதும், பளிரென என் மனத்தில் உதயமாயிற்று. அன்று உணவு கொள்ளும் பொழுதும், மாலையிலும், அவர் பேசிய பேச்சுக்களேக் கேட்டு கொண்டிருந்தபொழுது, அவரது வடிவத்தால் ஏற்பட்ட் ஏமாற்றம் மறைந்து போயிற்று. அவருடன் பழகிய அத் தனே ஆண்டுகளிலும், அவருடைய வடிவத்திற்கும் மனத் திடத்திற்கும், சிறந்த உரையாடலுக்கும், நிறைந்த கல்விக் கும் இடையே எவ்விதப் போராட்டமும் என் மனத்தில் நேர்ந்ததாக எனக்கு நினைவில்லை.: இந்த விவரப் படத்தை முடிப்பதற்குமுன் தோரோ தம் முடைய இனம், வகை, பற்றிக் கூறியுள்ளதைக் கூறி முடிக் கலாம். கிழக்கே திரும்புவதைக் காட்டிலும் மேற்கே அதி கம் திரும்பிச் செல்கிறவர் ; வீட்டினுள் நுழையும்பொழுது இருந்ததைக் காட்டிலும் அதிக கெளரவத்துடன் வீட்டை விட்டு வெளிப்படுபவர், குளிர் காலத்தையும் கோடைகாலத் தையும் விரும்புபவர், காட்டு வயலேயும், இருளேயும் ஒளியை யும் ஒரு சேர விரும்புபவர். கூட்டத்தைவிடத் தனிமையை விரும்புபவர். ஊர்தோறும் செல்வதை விரும்பாவிடினும், ஒரே இடத்தில் இருப்பதையும் விரும்பாதவர், எந்தப் பருவத்திலும், பகலிலும் இரவிலும், மணியடித்து எழுப்ப்ப் படாமல், காங்க்கார்டில் உள்ள காடுகளில் நிலே பெற்றுள்ள பைன் மரங்களின் ஒசையாலேயே விழித்து எழுபவர்.” ஓர் இரவு சொற்பொழிவு மண்டபத்தில் பேசிவிட்டு வழக்கமான மன உளைச்சலுடன் வீடு திரும்பினுர் தோரோ. ஒவ்வொரு சொற்பொழிவுக்குப் பின்னரும் இந்த நிலையில் தான் அவர் மீள்வது வழக்கம். எதிர்கால மக்களின் அதிர்ஷ்டவசமாக, அவர், தம்முடைய மனநிலை அனைத்தை பும் வெளியிடும் ஒரு நண்பனேப் பெற்றிருந்தார். அதுவே அவருடைய நாட்குறிப்பு. அந்த -குறிப்பில், அவர், தம்முடைய காமாலேக் கண்ணுல் கண்ட கருத்துக்களே யெல்லாம் வெளியிட்டு, அதல்ை திருப்தியடைவதுண்டு. 83