பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்முறை அவர் கீழ்வருமாறு எழுதினர் : "இந்தக் குளிர் காலத்தில் கேட்போர் கவனத்தை ஈர்க்கும் முறையில் இருமுறை பேசிவிட்ட பின், பேச்சுத் துறையில் வெற்றி பெறும் முயற்சியில் என்னே நானே மலிவாக்கிக் கொள் வேனே என்ற அச்சம் உண்டாகிறது. நான் எவற்றை உயர்ந்தவை என்று மதிக்கின்றேனே, நான் எதுவாக இருக்கின்றேனே, அவை அனைத்தையும், என் சொற் பொழிவைக் கேட்பவர் கவனிப்பதாகவே தெரியவில்லே ; அலட்சியம் செய்வதாகக்கூடத் தெரிகிறது. விட்டுக் கொடுத்தல் என்பதையே அறியாத ஹென்றி தோரோ தங்களுடைய நலனேக் கருதியாவது கூறுவதைச் சுவை படக் கூறவேண்டும் என்று எதிர்பார்க்க, அந்த ரசிகர் கூட்டத்திற்கு எவ்வளவு அகம்பாகம் இருத்தல் வேண்டும் ! இருந்தாலும், தம்முடைய சொற்பொழிவுகள் சிறக்கவில்லே என்பதை அறிந்தும், மேலும் மேலும் பேசிக் கொண்டே தர்ன் இருந்தார். அவரும், அவருடைய ரசிகர்களும், மிகச் சிறந்த பேச்சாளராகிய எமர்ஸனுடன் அவரை ஒப்பு நோக்கிக்கொண்டே இருந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும். புரியாததும், உலகியலுக்கு அப்பாற்பட்டதும் ஆன சொற்பொழிவை எமர்ஸன் நிகழ்த்தியபோதிலும், தம்முடைய சொந்தச் சிறப்பாலும், சிறந்த பேச்சுத் திறத் தாலும் சாதாரண உலகியலிலுள்ள மக்களைக்கூட மெய் மறக்கச் செய்து விடுவார். எமர்ஸ்:னப் போல் மேடைக் கலைத் திறமை இன்றேனும், தோரோ, இயற்கை, வாழ்க்கை ஆகியவைபற்றிய தம் உணர்ச்சிகள் போன்ற மிகக் கடினமான விஷயங்களைக்கூட, ரசிகர்கள் மனத் தில் செலுத்த முயன்றர். கலப்படமானதும், புரியாமல் விழிப்பதுமான ரசிகர் கூட்டத்திற்கு, என் மனத்தில் தோன்றும் கருத்துக்களே எவ்வாறு ஏற்றுவது ? என்று அவர் வருந்திகுர். பிறர் பேசாத புதிய கருத்துக்களையே அவர் பேசின. தால், ரசிகர்கள் அவற்றைக் கேட்பதில் இன்பமடைந்தனர். காங்க்க: டு, வொர்செஸ்டர் ஆகிய ஊர்களிலுள்ள சொற் பொழிவு மண்டபங்களில், பல்லாண்டுகள், ஆண்டுதோறும் பேசினர். எனவே, பிற நகரங்களுக்கும். கிராமங்களுக்கும் அடிக்கடி அழைக்கப் பெற்ருர். மனத்துக்கு ஒரு மாறுதல் அளிக்கும் முறையில் அவருடைய சொற்பொழிவுகள் அமை 84