பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதும் உண்டு. கேப் காட் பிரயாணத்தைப் பற்றிய அவரது நகைச்சுவை நிறைந்த பேச்சைக் கேட்டவர்கள் கண்ணிர் வருகிறவரைச் சிரித்தனர். காட்டு ஆப்பிள்போன்ற இயற்கை வரலாறு பற்றிய பேச்சுக்கள் நன்கு ரசிக்கப் பெற்றன. அவருக்கு நல்ல இனிமையான குரல் இருந்துங்கூட, ரசிகர்களேப் பார்த்துப் பேசாமல், தம் காகிதங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பேசின. மையின், தம் இனிய குரலே அவர் நன்கு பயன்படுத்த வாழ்நாள் முழுவதும், தொடர்ந்து சொற்பொழி வாளராக இருந்தும்கூட, அதற்கேற்ற வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லே. ஒருவர் எமர்லகுக இருப் பின் பணம் சம்பாதிக்க முடியும். ஆணுல் கிராமங்களி லுள்ள சொற்பொழிவு மண்டபங்களில் பேசிளுல் ஒருவேளே சில டாலர்கள் கிடைக்கலாம் ; பல சமயங்களில் அதுவும் இல்லாமற்கூடப் போகலாம். ஏன் இந்தச் சொற்பொழிவு மண்டபங்களில் ஒருவர் பேச வேண்டும் எனில், அவரிட முள்ள அறிவை வெளியிட, இந்த ஒரு வாய்ப்புத்தான் இருந்தது. கல்வி வேண்டும் என்று மக்கள் ஆவலுடன் விரும்பிய காலமாகலின், ரசிகர்கள் கூட்டத்திற்குப் பஞ்ச் மில்லை. சொற்பொழிவு மண்டபம் என்பது மிகச் சமீப காலத்தில் தோன்றியது எனினும், ந்யூ இங்கிலாந்து மக்களிடையே, மிகச் சிறந்த அறிவைப் பரப்பும் கருவியாக அது அமைந்து விட்டது. அறிவு வளர்ச்சியை ஒரளவே நம்பியவர்களும்கூட இவற்றை ஆதரித்தனர். அப்பொழுது தான், எழுத்தை ஆதரிக்கும் அளவுக்கு ந்யூ இங்கிலாந் தின் இ ல க் கி ய ப் புத்துணர்ச்சி வெளிப்படலாயிற்று. கருத்தை வெளியிடும் சாதனங்களாக, பழன் மயும் புதுமையும் ஒற்றுமைப்படும் முறையில், பன்னுாற்றுக் கணக்கான சொற்பொழிவுகள், பல்வேறு மாகாணங்களி லும் உள்ள பல்வேறு நகர, கிராம, சொற்பொழிவு மண்டபங் களில் நிகழ்ந்தன. இது ஒப்புமை கூற முடியாத முறையில் இருந்த அற்புதமான இயக்கமாகும். பிறர்க்குச் சொல்லக் சி.டி. கருத்து ஏதேனும் இருந்து, அகனச் சொற்பொழிவு வடிவத்தில் தரக்கூடிய சக்தி யாருக்கேனுட இருப்பின், அவர் குறைந்த அளவு தம்முடைய கிராமத்திலாவது அதைப் பரப்பும் வாய்ப்பை பெற்றிருந்தார். அவர் சொற் 85