பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்க்கார்டு கிராமப் பகுதிகளில் தோரோ அடிக்கடி 'சுற்றி வந்தார். இயற்கை வரலாற்றில் ஈடுபடாமலும், ஹக் கிள் பெர்ரிப் பழங்களைத் தேடிச் செல்லாமலும் உள்ள நேரங் களில், பண்ணைகளையும், காடுகளையும் அளவிடுவதிலும், நண்பர்களோடும் குடும்பத்தோடும் படகு ஒட்டுவதிலும் சிற்றுலாச் செல்வதிலும் காலங் கழித்தார். எந்தக் கட்டுப் பாட்டுக்கும் அடங்காத முறையில் அவர் சுற்றி வந்ததைக் கண்டவர்கள், அவரை அறியாத காரணத்தால், சில்ல றைச் சாமான்கள் விற்பவரென்றும், இயந்திரம் பழுது பார்ப்பவரென்றும், வீணுக ஊர் சுற்றுபவரென்றும் கருதி னர். கேப் காட் என்ற இடத்தில் அவர் சுற்றி வருகை யில், அண்மையில் நடந்த பாங்க் கொள்ளேயில் சம்பந்தப் பட்டவரோ என நினைத்து, போலீசார் அவரைக் கண் காணித்து வந்தனர். ஒருமுறை, மரத்தில் சாய்ந்து கொண்டு அவர் நிற்பதைக் கண்டவர்கள், ஒரு குடிகாரக் குடியானவர் என்றுகூடத் தவருகக் கருதி விட்டனர். அவருடைய உடை, வலுவானதாகவும், தண்ணிர் படியாத தாகவும், சாம்பல் நிறத்துடன் கசங்கியும், பிறரிடமிருந்து தம்மை மறைத் துக் கொள்ள வேண்டும் என அவர் நினைப் பதற்கு ஏற்றபடியாகவும் இருந்தது ; காலணிகள், மெருகு ஏற்றப்படாமல் கசங்கிக் கிடந்தன. நடந்து செல்வதைத் தான் அவர் விரும்பிளுர், கால்களேத் தொங்கவிட்டுக் கொண்டு, புகைவண்டி ஆசனத்தில் அமர்ந்திருப்பதை அவர் விரும்புவதில்லை. நீண்ட தூரப் பிரயாணத்திற்கு வேண்டிய சாமான்களின் அளவை, மிகுதியும் குறைத்துக் கொண்டு எளிதாகப் பிரயாணம் செய்தார். இரயில் மூலம் கனடாவுக்குச் செல்கையிற்கூட, அவருடைய சாமான் கள், ஒரு பேப்பரில் சுற்றப்பட்ட சிறு பொட்டலமும், பனே ஒலைத் தொப்பியுந்தாம். சிக்கனமாகப் பிரயாணம் செய்வதற்கும், மிக நீண்ட தூரத்தில் உள்ள இடத்தை மிகக் குறுகிய துரத்தில் அடைவதற்கும் சிறந்த வழி காலால் நடப்பது தான் அவ்வப் பூ திடக்கும்பொழுது, ஒரு கரண்டி, ஒர் ஆகப்பை, ஒரு தூண்டில், சிவப்பிந்தியர் உண வில் சிறு பருதி, கொஞ்சம் சர்க்கரை, உப்பு ஆகிய இவையே தேவை. ஒர் ஒடையையோ, குட்டையையோ காணும்பொழுது, அதில் மீன்பிடித்துச் சமைக்கலாம் ; அன்றேல், அவசரமாக ஒரு பொங்கல் தயாரிக்கலாம் ; 89