பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றேல், குடியானவன் விட்டில் நான்கு பென்னிக்கு ஒரு துண்டு ரொட்டி வாங்கலாம். அந்த ரொட்டியை அடுத்து ஒடும் ஒடையில் நனத்துப் பதப்படுத்திச் சர்க்கரையில் முக்கி உண்ணலாம். இது ஒன்றே ஒரு நாள் முழுவதற்கும் போதுமானது' என அவர் எழுதியுள்ளார். அவருடைய சாமான்களில் மிகவும் முக்கியமானவை ஒரு பெரிய தொப்பியும் குடையுமாகும் ஆளுல் அவற்றிற்கும. ஒரு காரணம் இருந்தது. அவருடைய தொப்பியின் ஒரங்களில் தாவர மாதிரிகளே வைத்துக் கொள்வார்; அவ்வாறு செய் வதால் அவருடைய கைகள் பிற வேலைகளுக்குத் தயாராக விருந்தன. மழைக்குரிய மற்ருேர் அங்கியைச் சுமப்பதை விடக் குடை கனமற்றிருந்தது. தோரோவின் காலத்தில்தான் தென்பகுதிகளில் அடி மைகள் வைத்திருக்கும் பழக்கத்தை ஒழிப்பதுபற்றிய இயக் கம் மிக மும்முரமாக நடந்தது. உள்நாட்டுப் போரின் முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. தென் பகுதித் தோட்டங்களிலிருந்து, மேலும் மேலும் அதிகப்படியான அடிமைகள், தப்பிக் கொண்டு வட பகுதிக்கு ஓடி வந்: தனர். அவர்களே வடபகுதிகளிற் குடியேற்றவும், கனடா நாட்டுக்குத் தப்பிச் செல்லவும் பலர் பரிவுடன் உதவினர். அடிமைகள் தப்பிச் செல்லும் ராஜபாட்டையில் காங்க்கார்டு கிராமம் இல்லாமையின், எப்பொழுதாவது ஒரு சில சமயம், சில அடிமைகளே அப்பக்கம் வந்தனர். அவ்வாறு வந்த துரதிர்ஷ்டம் பிடித்த அடிமைகளுக்கு, தோரோக் குடும்ப மும் அவர்களுடைய நண்பர்களும் அனைத்துதவிகளையும் செய்தனர் : வால்டனில் வாழும்பொழுது, எவ்வாறு ஒர் அடிமையைக் கனடாவுக்கு இரயிலில் ஏற்றிவிட்டு வடக்கே உள்ள துருவ நகூடித்திரத்திற்குச் செல்லுமாறு உதவிஞர் தோரோ என்பதை, அவரே கூறியுள்ளார். சீர் திருத்தக் கருத்துடைய அவருடைய குடும்பத்தின் மூலம் அடிமை ஒழிப்பு இயக்கத்துடன் பெரிதும் தொடர்பு கொன் டிருந்தார். என்ருலும் இவரும், எteர்பைனும் இந்த இயக்கத் தில் நேரடியாகப் பங்கு கொள்ளாமல், மானிட ஆன்மா வின் அடிமைத்தனம் பற்றிய ஒருவிதத் தத்துவ விசானே யில் ஈடுபட்டிருந்தனர். ஆணுல், 1830 இல், தப்பிச் செல் லும் அடிமைகள் பற்றிய சட்டம் இயற்றப் பெற்ற பிறகு, இவர்கள் ஒதுங்கி இருப்பதென்பது இயலாமற் போயிற்று. 90