பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெஸ்குலிட்ஸிலும் பிற வடபகுதி மாகாணங்களிலும் வாழ்ந் தவர்கள், நீண்ட தூரத்திற்கு அப்பால் உள்ளவையும், அடிமைகளே வைத்திருப்பவையுமான தென் பகுதி மாகா ணங்களுடன் மட்டுமல்லாமல், தங்கள் மாகாண அதிகாரி களுடனும் பகை கொள்ள நேரிட்டது. அடிமை ஒழிப்பு இயக்கம் அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. - 'தப்பிச் செல்லும் அடிமைகள் சட்டம்- நிறைவேற்றம் படு முன்பேகடிட, அடிமைகட்குச் சரண் தருவதாகவும், அதே நேரத்தில் அடிமைகள் வைத்திருப்பதை ஆதரித் தும் உள்ள மெஸ்சூலிட்ஸ் அரசாங்கத்தின் பிளவு மனப் பான்மையைத் தோரோ தம்முடைய 'சிவில் ஒத்துழை யாமை” என்ற நூலில் கண்டித்துள்ளார். அவரவர்களுடைய மனச்சான்றின்படியே வாழ வேண்டும் என்று விரும்பு கிறவர்கள், என்ன நிலையை அடைய நேரிடும் என்பதை, அவர் சிறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியே அறிவுறுத் தியது. 1851 ஏப்ரலில், சிம்ஸ் என்ற நீக்ரோவைப் பிடித்து மெஸ்சூஸிட்ஸ் அரசாங்கம் மறுபடியும் அவருடைய முத லாளியிடம் அனுப்பியதைக் கண்ட அடிமை ஒழிப்பு இயக் கத்தார், தம் அரசாங்கத்திடம் பெரிதும் பகைமை பாராட் டினர். அதிகாரவர்க்கத்தை எதிர்த்துப் புதிய போராட்டம் ஒன்றைத் தொடங்கத் தோரோ விஷயங்கள் சேகரித்துக் கொண்டிருந்தார். - - 1850 முதல் 1854 வரை, அரசாங்கத்திடம் அவர் கொண்டிருந்த பகைமை, நாளும் வளரலாயிற்று. தாம் கொண்ட கொள்கைக்காகத் தல்ைவரி கட்ட மறுத்த அவர், மறுபடியும், அதே கொள்கைக்காகத் தப்பிச் செல்லும் அடி மைகள் சட்டத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்க முனேந்தார். ஒருநாள் காலே, தம்முடைய வீட்டை வந்த டைந்த களைத்துப்போன நீக்ரோ ஒருவரைத் தோரோ எவ்வாறு காப்பாற்றிருர் என்பதைத் தோரோவின் நண்ப ராகிய மான் கியூர் கான்வே, விவரமாகக் ទា.រ៉ាំ : ចាវ f. “ஒரு பெரிய அறிஞர் ஓர் அடிமையிடம் எவ்வளவு பரிவும் அன்பம் காட்டிர்ை என்பதை எதிரே அமர்ந்தவாறு நான் கண்டேன். அந்த அடிமைக்கு உ'ைவிடுதல், வேடே அவன் கால்களேக் கழுவுதல், ஒய்வு தருதல் ஆகியவை நடைபெற வேண்டும். அமைதியே வடிவான தோரோ 91.