பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடன் வெளியிடப்பெற்றது) என்ற தலைப்பில் ந்யூ பெட் போர்டு, நாண்டுக்கெட், பிலிடெல்ஃபியா ஆகிய இடங். களில் அவர் சொற்பொழிவாற்றினர். ஒயாது உழைத்தல், பணஞ் சேகரித்தல் என்ற இரண்டை மட்டுமே கடமை யாகக் கொண்ட சமுதாயத்தில் வாழநேரிட்ட மனிதன், எவ்வளவு கீழ்த் தரமாகச் செல்ல வேண்டி இருக்கிறது என்பதுபற்றியே இச் சொற்பொழிவுகளில் அவர் பேசினர். அத்தகைய ஒரு சமுதாயம் கடவுளேக்கூட பெருஞ், செல்வமுடைய ஒருவராகவும், கொஞ்சம் காசுகளேத் துரவி அவற்றைப் பொறுக்க மனித குலம் அடித்துக் கொள் வதைப் பார்ப்பவராகவுமே கருதும் என்று கூறியுள்ளார். மனிதர்கள் வாழ்க்கையை எளிதாகக் கருதி, ஒயாமல் உழைப்பதை விட்டு விட்டு, செய்தித் தாள்களே ப் படிக்கா மல் அக வாழ்க்கையைச் செம்மையாக்குவதில் முனேந்து, கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பொன் தேடும் பேராசையை ஒழித்து, தங்களுடைய மனத்தின் ஆழத்தில் தோண்டி அங்குள்ள பொன்னே எடுக்க முயன்ருல் எவ்வளவு நன்ருக இருக்கும் ? ஒரு நாள் மாலே நேரம் முழுவதையும் காட்டில் செலவழித்து, அதன்மாட்டுக் கொண்ட அன்பால் சுற்றி வருவதானுல், அவனை வீணுக ஊர் சுற்றுபவன் என்று பழிக்கின்றனர். ஆளுல், எதிர்கால வியாபாரம் செய்யும் நோக்கத்துடன், அந்த மரங்களனைத் தையும் வெட்டிச் சாய்த்து, காட்டை மொட்டையடிப்ப வ8ணப் பார்த்துப் புது முயற்சியில் ஈடுபடும் சுருகருப்புள்ள மனிதன் என்று உலகம் மதிக்கிறது என்ருர். - சில வாரங்கட்கு முன்புதான், காங்க்கார்டில் ஒரு வாரம் என்ற நூலின் விற்காத ஏழுநூறு பிரதிகளையும், வெளியீட்டாளர், அவரிடமே திருப்பி அனுப்பி இருந்தனர். ஒருவேளை அதில் மனம் நொந்து தான் போலும் அவர் கீழ் வருமாறு எழுதினர் : "பணம் சம்பாதிக்கும் வழி எதுவாக இருப்பினும், ஒரு வழி தவருமல் அனைத்துமே நம்மைக் கீழ் நோக்கி அழைத்துச் செல்பவையாகவே உள்ளன...... ஓர் எழுத்தாளனுகவோ, சொற்பொழிவாளஞகவோ இருந்து, பொருள் சம்பாதிக்க வேண்டுமானுற்கூட, மக்களைத் திருப் திப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வது தலே கீழாக விழுவதேயாகும்... ...மனிதத் தன்மையில் கீழ் நிலைக்குச் செல்வதற்காகவே போலும் ஊதியம் தருகிருர் 93