பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 வல்லிக்கண்ணன்

கெளரவக் குறைச்சலாகவும் ‘போர் அடிக்கும்’ விஷயமாகவும் கருதுகிறவர்கள் சிவபுரத்திலும் அதிகரித்துவிட்டார்கள். நினைத்த உடனேயே சட்டையைப் போட்டுக் கொண்டு, பஸ்ஸில் ஏறி டவுணுக்கோ ஜங்ஷனுக்கோ போய்விட வேண்டியதுதான்.

வேலை இருக்கிறதோ இல்லையோ, தினசரி சிவபுரம் கிராமத்திலிருந்து டவுண் அல்லது ஜங்ஷனுக்குப் போய் வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். “பொழுது போகலே இப்படி டவுனுக்குப் போயி போத்தி ஓட்டலில் காப்பி சாப்பிட்டுட்டு, அங்கே இங்கே நின்று போட்டு வந்தால் தனி உற்சாகம் ஏற்படுது. ‘ஜங்ஷன் போனேன். ராஜ் கபேயில் டிபன் பண்ணிட்டு, ஒரு படம் பார்த்தேன்’ என்று பெருமை பேசும் ‘ஜம்பம் ஜான்கள்’ ஒன்றிருவர் அல்லர், நகரங்களை ஒட்டி இருக்கிற கிராமங்களில் சகஜமாகக் காணப்படுகிற இந்த ரகப்பிரகிருதிகள் சிவபுரத்தி லும் இருந்ததில் வியப்பு இல்லைதான்.

அவர்கள் மத்தியில் ‘எதுக்காகங்ஙேன் வெளியூர் போகனும்?’ என்று கேட்டுக் கொண்டு ஊரை விட்டு அசையாமல் இருந்த சொக்கய்யாதான் காலத்தோடு ஒட்டி வராத அபூர்வ ஆசாமியாகத் தென்பட்டார்.


அவர் உற்றார் உறவினர் விட்டுக் கல்யாணம், கருமாதி என்று சொல்லியும் சிவபுரத்தை விட்டு வெளியேறுவதில்லை. “எனக்கு வீட்டுச் சவுகரியம் வேறு எங்கேயும் கிடைக்காது. வேறே இடத்திலே ராத் தங்குவது எனக்கு ஒத்துக்கிடாது. அதிகாலையிலே எழுந்து குளித்து விட்டு, பூசை பண்ண வெளி இடங்களில் போதுமான வசதி இருப்பதில்லை. அதனாலேயே நான் வெளியூர் விசேஷங்களுக்குப் போவதில்லை. வே, நான் செத்தால் வெளியூர்காரன் எவனும்