பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவகியின் மனப் பண்பு!



" என் ராஜா” என்று குயில்போல் கூவினாள் தேவகி.

இப்படிக் கூவுகிற போதே அவள் மயில் போல் ஆடி அசைந்தாள் என்று தனியாகக் குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லைதான். கொஞ்சிக் குழைந்து நெருங்கி வரும் இளம் பெண் சிலை மாதிரியா நின்று கொண்டிருப்பாள். அதிலும், தேவகி ஆடல், பாடல், நடிப்புக் கலைகள் பலவும் கை வந்த பெண் ஆயிற்றே!

அவளுடைய 'ராஜா' ஏதோ எழுதிக் கொண்டிருந் தான். அவன் பெயரும் ராஜா என்றே இருக்கட்டுமே! அதில் என்ன கஷ்டம், அல்லது நஷ்டம்!

முகத்தை திருப்பாமலே அவன், "என் மான் குட்டிக்கு இப்ப என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

"ராஜா, ராஜா, ராஜா" என்று உணர்ச்சி தளும்பும் தேன் குரலை இழைய விட்டாள் அவள். 'உகுங்' என மணிச் சிரிப்பு தெறிக்க வைத்து, அவன் அருகில் ஒடித வளையல்கள் கலகலக்க தனது கரங்களை அவன் ఉు தவழச் செய்தாள். அவன்மீது துவண்டாள்".