பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்111


கவி ஏ.ராஜாவுக்கும் இல்லாமல் இல்லை. எனினும், எப்பொழுதும் அவள் கையையே எதிர் பார்த்து காத்துக் கிடக்கும் கணவன் அந்தஸ்து அவனுக்கு மகிழ்வூட்டும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. பொருள்,புகழ், மதிப்பு முதலிய நிலைகளில் அவளைவிட உயர்ந்த படியை எட்டிப்பிடிக்க முடியாமல் போனாலும் கூட அவளுக்கு சமமான அந்தஸ்தைத் தேடியாக வேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம்.

தன்னுடைய திறமையும், உழைப்பும், பெரும் புகழைப் பெற்றே ஆகவேண்டும்.பெற்றே தீரும் எனும் உறுதியோடு, நம்பிக்கையோடு, ஆர்வத்தோடு உழைத்தான். “புகழ் வந்த பிறகு பணம் தானாக வரும். அல்லது வராமலே போனாலும் கவலை இல்லை!” என்று அவன் எண்ணுவது வழக்கம்.

தனது எண்ணத்தை அவன் தன் ராணியிடம் சொல்லத் தயங்கியதுமில்லை.

அவன் எழுதிக் கொண்டே இருந்தான். என்னென்னவோ முயற்சிகள் செய்தான். அவளும் அவன் மனசை மாற்ற தன்னாலான வரை முயன்று கொண்டுதான் இருந்தாள்.

அன்றும் அதேதான் நடந்தது.

எழுத்துக்கு தடை போட்டபடி எதிரே வந்து நின்ற இன்பத்தை ஏறெடுத்துப் பார்த்தான் கவிராஜா. மோகன முறுவல் பூத்தான்.

காலமெல்லாம் வீணாகுதே!” என்று இழுத்தாள் அவள்.

'இல்லை. பொழுதை பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையில் ஈடுபட்டிருக்கிறேன். என முணகினான் அவன்,