பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்113

 கவி ஏ. ராஜாவின் கனவுகள் வெறும் பகற் கனவுகளாகப் புகைந்து போகவில்லை. அவன் தனது உள்ளம், உணர்வு, உழைப்பு மூன்றையும் ஈடுபடுத்தி உருவாக்கிய 'மின்னல் மகள்' காவிய நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. புத்தகமாக வெளி வந்தது. விரைவில் திரைப்படமாயிற்று. அது எங்கும் உரிய பொருள் ஆகிவிட்டது. கவி. ஏ. ராஜாவின் பெயர் மீது ஒரு தகத்தகாயம் படரக் காலம் துணை செய்தது.

புகழ் போதை கவியை கிறக்கி, அவனை செயலற்றவனாக மாற்றி விடவில்லை. வெற்றி பெற்று தந்த உற்சாக மிடுக்கோடு அவன் பூலோக சுந்தரி எனும் காவியத்தை அற்புதமாக உருவாக்குவதில் முனைந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே கலை உலகப் பண மனிதர்கள் அவனை நாடி வந்தார்கள். அவன் உறுதியாய் தெரிவித்தது போல, நாளுக்கு நாள் அவனுடைய பணம், புகழ், அந்தஸ்து நிலைமை உயர்ந்து கொண்டே இருந்தது.

கவி ஏ. ராஜா, தேவகியிடம் தங்கள் கல்யாணம் பற்றி உற்சாகமாகப் பேசலானான். விரைவிலேயே மன விழாவை மிகச் சிறப்பாக நடத்தி விடலாம் என்று திட்டம் தீட்டி வர்ணித்தான். தேவகி குதுகலித்துக் கும்மாளமிட்டுக் கூத்தாடுவாள் என்று அவன் நம்பினான்.

ஆனால், அவன் எதிர்நோக்கிய விதத்தில் இல்லாது போயிற்று, தேவகி தந்த எதிரொலி. அவள் முன் போல் அதில் ஆர்வம் காட்டவில்லை.

‘எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய கவி தனது லட்சிய வேட்டையில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தான். பணம் நிறைய வரவும், தனக்கென ஒரு