பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116வல்லிக்கண்ணன்

 வேண்டும். அவளுடைய புகழை மங்க வைக்கும் அந்தஸ்து பெற்றுவிடுகிற சுயம்பிரகாசி- அவளுக்கு அடங்கி நடக்க விரும்பாது தன் போக்கில் செயல்புரிகிற ஒருவனின் மனைவி என்ற கவுரவத்தை அவள் விரும்ப வில்லை. தேவகி ஆசைப்பட்டு தேடுவது உண்மையான ராஜாவை அல்ல; அழகான ஒரு கூஜாவைத்தான்! இப்படி அறிவுறுத்தியது அவன் சிந்தனை.

“ஆகா! தேவகியின் இந்த மனோபாவம் இதுவரை எனக்குப் புரியாமல் போய் விட்டதே! என்ற வருத்தம் அவனுக்கு ஏற்படத்தான் செய்தது. இருந்தாலும் ஒரு ஆனந்தத் துடிப்பு அதை அமுக்கியது.

இந்த அனுபவ ஒளியை எனது பூலோக சுந்தரி காவியத்தில் பதிவு செய்து விடலாம்!” என்ற மகிழ்ச்சியே அது.

★ தினமலர்-தீபாவளிமலர் 1992