பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்123

 எடுத்துக் கொண்டார். ஒட்டல் சாப்பாடு ஒத்து வராது என்பதனால், எப்போதும் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த நளபாக நிபுணர் கொம்பங்குளத்துப் பிள்ளையை (கொம்பங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த பிள்ளைவாள் அவர்) உடன் அழைத்துச் சென்றார்.

கார் இருந்த போதிலும், அருமையான குதிரையும் ஜோரான வண்டியும் இருந்தால் அதன் மவுசே தனிதான் என்று எண்ணி, குதிரை வண்டியையும் மாநகருக்கு வரவழைத்திருந்தார் அவர்.

மாநகரில் சகவாசம் செய்தவாறே தனது படஉலக முற்றுகையை தீவிரமாக நடத்தி வந்தார் ராஜப்பா. பலரையும் போய் பார்த்தார். முக்கியமானவர்களை "ஃபிரண்டு புடிச்சு' வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். அவ்வப்போது தனது கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் போட்டுக் கொண்டே வந்தார்.

நடிக-படாதிபதியிடமும் அவ்வப்போது தன் ஆசையை அவர் தெரிவித்தார், 'அண்ணாச்சி, உங்க படத்திலேயே நமக்கு ஒரு சான்சு கொடுங்களேன்' என்று நேரடியாகவே கேட்டும் தீர்த்தார்.

அண்ணாச்சி தயங்கி, யோசிப்பது போல் நடித்தார். 'உங்களுக்கு என்ன வேடம் பிரதர் தர்றது? இது ரொம்பவும் சிக்கலான விஷயம்’ என்றார்.

"என்ன வேடம்னாலும் கொடுங்க. எதையும் நான் பிரமாதமாச் செய்வேன்!” என்று ராஜப்பா உற்சாகமாய் சொன்னார்.

உங்களுக்கு நடிப்பு அனுபவம் இல்லியே பிரதர். எதுக்கும் முன் அனுபவம் இருக்கணும்?' என்று உபதேசத்தில் இறங்கினார் அண்ணாச்சி.