பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128வல்லிக்கண்ணன்

 புகழும் படாடோப வாழ்வும் பெற்றுவிட முடியும் என நம்பி, அந்த உலகத்திலுள் பிரவேசித்தவள் தான். ஏமாற்றம் அவளை ஆட் கொண்டது. பிறகு பிழைப்புக்காக அதில் ஒட்டிக் கொண்டிருந்தாள். கும்பலில் வருவாள்; தோழியாய் குதிப்பாள்; நாட்டியக் குழுவில் ஆட்டம் காட்டுவாள். எப்படியோ ஏதாவது சான்ஸ் கிடைத்துக் கொண்டுதானிருந்தது. அவளுக்கு.

ராஜப்பா அவள் ஒளியில் இறங்கிய விட்டிலானார். அவர் வீட்டுக்கு கல்யாணி அடிக்கடி வந்து போனாள். பரஸ்பரம் ஒருவர் மனசை ஒருவர் நன்கு புரிந்து கொண்டரர்கள்.

நீ என்னோடு இருந்து விடேன், கல்யாணி. இந்தப் பிழைப்பு உனக்கு என்னத்துக்கு? நாம திருநகருக்குப் போய் விடலாம்' என்று ராஜப்பா ஒரு நாள் அவளிடம் கூறினார்.

தான் ஒருநாளும் ஸ்டார் ஆகப்போவதில்லைஇரண்டாவது ஹீரோயின் தரத்துக்குக் கூட உயரப் போவதில்லை. என்பதை உறுதியாக உணர்ந்திருந்த "எக்ஸ்ட்ரா நடிகை' கல்யாணி அவரது கோரிக்கைக்கு இணங்கினாள்.

வாழ்க்கையில் ஒரு பற்றுதலும், பாசமும், பிடிப்பும், நிரந்தரமான குடியிருப்பும், குடித்தனப் பாங்கான ஒரு அந்தஸ்தும் தனக்கு சித்திக்குமே என்ற எண்ணம் அவள்ளுக்கு.

திருநகரைப் பிரிந்து மாநகருக்கு வந்து சேர்ந்த ஏழாவது மாதத்தில் தனது லட்சிய நோக்கில் தோல்வி உற்றவராய் தன் ஊருக்கே திரும்பினார் ராஜப்.பா. குதிரையையும் வண்டியையும் விற்று விட்டார். காரில் தான் பயணம் செய்தார். கூடவே கல்யாணியும் இருந்தாள், -