பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்145


ஆனால், பரிபூரண ஆனந்தன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டான். அன்றைய அலுவலைப் பூரணமாக முடித்த பின்னரே புறப்படுவான். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவால்லே எடுத்த வேலையை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்க வேணும் என்பான்,

மற்றவர்களும் அவ்விதம் செய்யவேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவர்களில் யாரும் அப்படிச் செய்ய முன்வரவில்லை; அவனை அப்பாவி, ‘பைத்தியாரன்' (பைத்தியக்காரன்) என்றும் கருதினார்கள்,

"இப்ப இப்படித்தான் இருப்பாரு. கல்யாணம் ஆகி விட்டால் இவரும் வழிக்கு வந்து விடுவாரு, இவருடைய சுத்தம் ஒழுங்கு. பூரண பெர்பெக்ட்தனம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேருகிற அம்மாவிடம் பலிக்குமா என்ன? பெண்கள் பெரும்பாலும் அவரவர் இஷ்டம் போல் மெத்தனமா, சோம்பேறித்தனமா, பெர்டக்ட் தன்மை எல்லாம் பார்க்காமல்தான் காரியங்கள் பண்றாங்க, பரிபூரண ஆனந்தருக்கு ஒரு பரிபூரண ஆனந்தியா வரப்போறா பார்ப்போம்!” என்று நண்பர் கள் கிண்டல் செய்வதும் சகஜமாகி விட்டது.

அது அவனை யோசிக்க வைத்தது. கவனிக்கச் செய்தது. பெண்களின் போக்குகளை, இயல்புகளை, பேச்சுகளை ஸ்டடி பண்ணும்படி தூண்டியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும்படி பண்ணி விட்டது.

'நமக்கு ஒத்து வரக் கூடிய பெண் கிடைக்கமாட்டாள். நம்மை அவள் வழிக்கு இழுத்து விடக் கூடியவளாகவே பெண் இருப்பாள். நம்முடைய பிரின்ஸியின் கொள்கை, சுபாவம் எல்லாம் எவளோ ஒருத்தியினால், ஒதுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, நம்மிடமிருந்து அகற்றப் பட்டு சேச்சே., அது சரிப்படாது. ஆகவே நமக்கு