பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்147


இரவில் பால், ரொட்டி, பழங்கள். ஆரோக்யமாக இருந்தார் அவர். இருந்தாலும், மரணம் பற்றிய நினைப்பு ஆனந்தரின் உள்ளத்தில் நிலைத்து நின்றது. தனது மரணத்துக்கும் முன்னேற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.

தான் இறந்ததற்குப் பிறகு தனது உடல் முழுமையாக, அப்படியே இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆகவே தன் சடலத்தை சமாதியில் பத்திரமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்.

தன் வீட்டின் பின்புறத் தோட்டத்தில், நல்ல முறையில் சமாதிக் குழி தோண்டி, சிமிண்டினால் பூசி வைத்தார். உயிரோடு இருக்கிற போதே தனக்கான சமாதிக் குழியையும், சுற்றுப்புறக் கட்டுமான வேலைகளையும் சீராகவும் சுத்தமாகவும் அமைத்து, தானே கண்டு மகிழ முடிந்ததில் ஆனந்தருக்கு ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது.

இதர செலவுகளுக்கத் தேவைப்படக் கூடிய பணத் தையும் ஒரு பாங்கில் போட்டு வைத்தார் அவர். இறுதிச் சடங்குகள் எப்படி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, விளக்கமாகவும் எழுதி வைத்தார். முக்கியமானவர்களிடம் இவையற்றிச் சொல்லி ஏற்பாடும் செய்தார்.

தன்னுடைய வாழ்க்கையில் முழுமையான திருப்தியோடு நாட்களைக் கழிக்கலானார் ஆனந்தர்.

வாழ்க்கை விளையாட்டுப் புத்தி உடையது. அல்லது வாழ்க்கையை இயக்குகிற சக்தி விளையாட்டுத்தனம் கொண்டது என்று சொல்லலாம். அது