பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ★ வல்லிக்கண்ணன்

பட்டான். அவனோடு சதா காட்சி அளித்துவந்த, செல்வச் செழிப்பும் பகட்டும் ‘ஸொசைட்டித்தனமும்’ ஆடை போலவும் அலங்காரம் போலவும் உடம்பில் படிந்திருக்க, ஒய்யாரமாய் திகழ்ந்த மங்கை அவனிடம் விடைபெற்றுப் போய்விட்டாள்

அவள் பெரிய இடத்து அம்மணி. அது தொழில் அதிபர் செல்வநாயகத்துக்குத் தெரியும். அவளுடைய கணவன் பிசினஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்த வன் அன்றைய பிளேனில் அந்நகரில் வந்து இறங்கு வதற்கு இருந்தான் என்பதையும் அவர் அறிவார். ‘ஆகவே பையனுக்கு இனி இங்கு வேலை இல்லை. நம்ம யோசனையை மகிழ்ச்சியோடு வரவேற்பான்’ என்று அவர் மனம் பேசியது.

அவர் தற்செயலாக அந்தப் பக்கமாக நடப்பவர் பேல் போய், ‘இங்கே உட்காரலாமா?’ என்று கேட்டபடி அவனுக்கு எதிரே அமர்ந்தார், மெதுவாகப் பேச்சு கொடுத்தார். ‘உங்களை அடிக்கடி இங்கே பார்க்கிறேனே, என்ன வேலையோ?’ என்று விசாரித்தார்,

அவருடைய போக்கை ‘அநாகரிகமான தலையீடு’ என அவன் கருதவில்லை, புன்முறுவலோடு ‘பிசினஸ்’ என்றான்.

“என்ன பிசினஸோ?”

“தேவைப்படுகிறவர்களுக்கு அவர்கள் தேவையை அனுசரிந்து, திருப்திகரமாகப் பணி புரிவது!”

“ஏதாவது கம்பெனியின் பிசினஸ் சிப்ரசென் டேட்டிவோ? அல்லது ஏஜன்சி ஏதேனும்...”

“அதெல்லாம் இல்லை, இது சொந்தமான, சமூக உறவு ரீதியான, ஒரு பிசினஸ்” என்று சொன்ன இளைஞன், அதற்குமேல் விளக்கம் கூறவில்லை, தேவையில்லை என்று எண்ணினான் போலும்,