பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரே பாடம்



குராமன் 'ஒரு மாதிரியான பேர் வழி' என்று தான் அவனை அறிந்தவர்கள் சொல்வார்கள். அவன் தன்னைப்பற்றி அவ்விதம் சொல்லிக் கொள்வானா என்ன! அவனுக்கு மற்றவர்கள் எல்லோருமே 'ஒரு மாதிரி' ஆகவும் உலகமே என்னமோ ஒரு தினுசாகவும் தான் தோன்றக் கூடும்.

'காதல் தேவதையின் பட்டயம் பெற்ற சீடன்' தானேதான் என்ற எண்ணம் ரகுராமனுக்கு இருக்குமோ என்னவோ அல்லது, 'காதல் செய்வீர் உலக்த்தீரே' என நாவலித்த கவியின் வாக்கை ஏற்று, அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு கவி உள்ளம் பெற்ற தனக்கு உண்டு என்ற நினைப்பு அவனுக்கு இருந்தாலும் இருக்கலாம்.

அவனுடைய எண்ணங்கள் எப்படி இருந்தால் என்ன? அவற்றின் விளைவாக மலர்ந்த செயல்கள் அவன் வாழ்க்கையின் ஏறு அலைகளாகவும் இறங்கு அலைகளாகவும் விளங்கின என்பதுதான் முக்கியம்.

காதல் எனும் அற்புதத்தின் முதல் ரேகை அவன் உள்ளத்தை தொட்டபோது, ரகுராமனுக்கு பதினேழு வயதுதான் ஆகியிருந்தது. பள்ளிப் படிப்பை முடித்து