பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182வல்லிக்கண்ணன்


மானால் காவியத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கலாம். மஜ்னு ஒரு காதலில் தோல்வி அடைந்த பிறகு மனம் ஒடிந்து போயிருக்கத் தேவையில்லை. முதல் காதல் முறிந்து போனால் அடுத்து வேறு காதல்; ஒரு காதலி நழுவி விட்டால், இன்னொரு காதலி. எதிர்ப்படாமலா போவாள்? 'நவயுக ஜூலியட் ஒரு டஜன் ரோமியோக்களை விரும்ப முன் வருவாள்' என்று ஒரு அறிஞர் சொல்லவில்லையா? இது ராமனின் தடம் புரண்ட சிந்தனை.

அவன் இப்போது ஒரு முதலாளியிடம் செயலராகப் பணியாற்றி வருகிறான். அந்த முதலாளியின் மகள் செல்வா குதித்து ஆடும் கோலமயில். ஒயிலாக நடக்கும் மணிப்புறா. எல்லோரிடமும் சி ரி த் து ப் பேசும் வண்ணக்கிளி.

ரகுராமன் அவளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனை நன்கு அறிந்தவர்கள் ஒரு சோதிடம் கூறமுடியும்.

"அவன் அறிந்தது ஒரே பாடம். ரகுராமன் செல்வாவிடமும் அந்தப் பாடத்தை ஒப்புவிப்பான் அவள் கையினால் கன்னத்தில் அறைவாங்கிக் கொண்டு வெளியேறுவான். அப்புறம் வேறு ஊர் வேறு வேலை, வேறு காதலி மயக்கம்!"

அவர்கள் கூறும் 'எதிர்காலப் பலன்' அப்படியே பலித்துவிடக்கூடும். அனுபவங்கள் மனிதர்களை அவ்வளவாக ஞானவான்கள் ஆக்கி விடுவதில்லை என்பதுதானே வாழ்க்கை நியதியாக இருக்கிறது!

★ ்இளையமித்திரன்' (சுதேசமித்திரன்)- 19-3-1995