பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாதனை வீரர்



"வே, உமக்கு கவனிப்பும் நிலையான பேரும் வரணும்னு சொன்னா, அதுக்காக நீரு அபாசமான காரியங்களை செய்தாகனும்கிற அவசியம் எதுவும் கிடையாது. அசட்டுத்தனமான, முட்டாள்தனமான, கோணல் தனமான காரியங்களை செய்தும் நீரு பேரு பெற முடியும்."

இப்படி ஓங்கி அடித்தார் சூரியன் பிள்ளை அண்ணாச்சி. அவரது முழுப்பெயர் சூரிய நாராயணபிள்ளை. வழக்கத்திலே அது சூரியப்பிள்ளை என்று குறுகிப் போச்சு, "என்ன அண்ணாச்சி இப்படிச் சொல்லுதிக?" என்று அதிசயித்தார், கூட இருந்த ஒரு தம்பியா பிள்ளை

"இல்லாததையா சொல்லுதேன். இந்திய சரித்திரம் முகமது பின் துக்ளக் செயல்களையும் பதிவு செய்து வச்சிருக்காக இல்லையா? அவன் ஏறுமாறான காரியங் களைத்தானே செய்துக்கிட்டிருந்தான்?" என்று கேட்டார் சூரியன் பிள்ளை,

பிறகு அவரே தொடர்ந்தார். "அவ்வளவு தூரம் போவானேன்! நம்ம தாமிரவர்ணி ஆத்திலே கொக்கிர