பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்51

 மென் குரலில் சொன்னார். நீத்தண்ணி இருக்குமா? ஒரு டம்ளர் கொடேன் என்றார்,


சோமு வீட்டினுள் போய், பழஞ்சோற்றுப் பானையில் உள்ள தண்ணீரை ஒரு சிறுசெம்பில் எடுத்து வந்து அவரிடம் தந்தான். உப்பு சேர்க்கப்பட்டிருந்த அந்த "நீராகார'த்தை அவர் குடித்தார். செம்பை கீழே வைத்து விட்டு, மவுனமாக அமர்ந்திருந்தார்.


பிறகு எழுந்து, துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு, வாறேன்’' என்று முனகியபடி நடந்தார். வந்தபோது இருந்த மிடுக்கு இப்போது இல்லை அவர் நடையில். நடப்பதே சிரமமான வேலையாக அமைந்து விட்டதுபோல் தோன்றியது.


சோமு அவருக்காக அனுதாபப்பட்டான். பாவம் என்று கூறிக் கொண்டான்.


அன்று பிற்பகலில் 'ஆண்டியாபிள்ளை செத்துப் போனார்' என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாகத்தான் இருந்தது.

இதயம் பேசுகிறது" 15-12-85