பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62வல்லிக்கண்ணன்

 வயிற்றில் அடித்தும், உழைப்புக்கு உரிய பலனைச் சுரண்டியும், என்னென்னவோ பண்ணியும் சொத்தோடு சொத்து சேர்த்து, பெரிய முதலாளி ஆக முடிந்தது என்பதை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. வடமலையப்பரின் மகன் ராசாப்பிள்ளை சர்க்கார் தமூனாக்களிலும், பத்திரங்களிலும் 'தொழில்’ என்கிற கலத்தில் 'சுகஜீவனம்' என்று எழுதி, கெளரவம் பெறவும் முடிந்தது. சோம்பேறி வாழ்க்கைக்கு 'சுகஜீவனம்' என்று பெயர். அதுவும் ஒரு தொழில் என மதிக்கப் பட்டது சமுதாயத்தின் நோக்கிலே!

"துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறக்கும் என்பார்கள். முதலாளிக்குப் பிறந்த 'குட்டி முதலாளி' மட்டும் சுறுசுறுப்பனாகவா இருந்து விடுவான்? சோம்பேறி மகன் சோம்பேறியாக விளங்குவதுதான் சமூக நியதி; குலதர்மம், பிறவிப் பெருமாளும் விதிவிலக்கு அல்ல. அவருடைய சொந்த வேலைகளைக் கூட அவரே செய்வதில்லை. செய்ய முடிவதில்லை, அவற்றைக் கவனித்து முடிக்க தனித்தனி ஆட்கள். எல்லாம், அவரிடம் பணம் இருந்தது என்கிற ஒரே காரணத்தினால்தான். அந்தப் பணத்தைச் சேர்க்க அவர் என்ன பாடுபட்டார், தனது உழைப்பினால் கிடைக்காத பணத்தை அவர் இஷ்டம்போல் செலவு செய்ய அவருக்கு என்ன உரிமை இருந்தது? அதைக் கேட்கும் குரல் எழவேயில்லை. அவர் முதலாளி மகன் முதலாளி; அதனால் அவர் எப்படியும் வாழ முடியும் வாழலாம் என்ற நம்பிக்கை நிலைத்திருக்கிறது சமூகத்திலே, மனிதரின் பக்திக்கும், பணிவுக்கும், பயந்த சுபாவத்துக்கும் பூர்வ புண்ணியம்.... தலைவிதி- கொடுத்து வைத்தவர்' என்பன போன்ற இருண்ட எண்ணங்களும் துணை சேர்கின்றன.

ஆகவே, உழைக்க வேண்டியவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கிவிடப் பெற்றிருந்த அலுவல்களில் ஈடு