பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76வல்லிக்கண்ணன்

 சேகரம் செய்து கொண்டு, மறுநாள் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்குத்தான் அவர் மீண்டும் வந்து சேருவார். நண்பர்கள் ராமலிங்கத்துக்காக சிற்றூரில் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.

கடைசி நேரத்தில் கூட, வேண்டாம் பிரதர்! ஏன் இந்தப் பயங்கரமான சோதனை? ஒன்றில்லாவிட்டால் ஒன்று விபரீதமாக நேர்ந்துவிட்டால், என்ன செய்ய முடியும்? நீயும் எங்களோடு வந்து விடு என்று சிலர் சோன்னார்கள்.

அவர்களோடு போனோமில்லையே!” என்று, இரவில், தனியாக, கோயிலினுள் உட்கார்ந்த ராமலிங்கம் எண்ணினான். ஆனால் சாயங்கால வேளையில், அவன் முரட்டுப் பிடிவாதமாக, இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது. பூசாரி தினசரி இந்த இடத்தில் இருக்கவில்லையா? நான் ஒர் இரவு தங்கியிருந்தால், செத்தா போவேன்! என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

தின்ற கொழுப்பும் தீபாவளி மப்பும்’' என்பார்களே, அது மாதிரியான கொழுப்பும் அறிவு மந்தமும், அகம்பாவமும்தான் என்னை அப்படிப் பேசத் தூண்டியிருக்கும் என்று ராமலிங்கம் நினைத்தான். இப்போது மணி என்ன இருக்குமோ தெரியவில்லை. விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ? என்று அவன் மனம் குறுகுறுத்தது.

கைக் கடிகாரம் அவசியமான தேவைகளுள் ஒன்று என அவன் எண்ணியதில்லை. பலரைப் போல தாமும் கட்டிக் கொள்வதுதான் நாகரிகமாக இருக்கும் என்று அவன் ஆசைப்பட்டதுமில்லை. ஆனால், இப்போது நேரம் அசையாது கனத்த சுமை போல் தலைக்கு மேல் அழுத்துவது போன்ற உணர்வு வளர்கையில், தனியாக இருட்டினுள் இருக்கையில், 'சே, நேரமே போக மாட்