பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்85


கவனித்து மார்க் கொடுத்தார். எனக்கு எண்பத்தைந்து மார்க் வந்தது இன்னொரு பையனுக்கு பதினெட்டு மார்க்தான் கிடைத்தது. அந்த சார் தனது பாலிசியைப் பெருமையாக விவரித்தார். நான் பேப்பர் திருத்துகிற விதமே தனி, விடைத்தாள்களின் கட்டை எடுப்பேன். முதலில் இருக்கிற தாளுக்கு பாஸ் மார்க் கொடுப்பேன். அடுத்தடுத்து பெயில் மார்க்தான். இப்படி மாறி மாறிக் கொடுப்பேன். நமசிவாயம் பேப்பர் பெயரில் மார்க் பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்குது. அதுதான் விஷயம் என்றார். இந்த லட்சணத்திலேதான் இருக்கும் பலபேருடைய பாலிசி!' என்று நமசிவாயம் கூறினார்.

"பார்க்கப் போனால் கடவுள் கூட அந்த வாத்தியார் மாதிரிதான் நடந்து வருகிறார். நல்லவங்க, திறமை சாலிகள், தகுதி உடையவங்க கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. ஆனால் ஏமாற்றுகிறவர்கள், அயோக்கியர்கள், மனசாட்சி இல்லாது செயல் புரிகிறவர்கள் சகல வசதிகளையும் பெற முடிகிறது. இதெல்லாம் கடவுள் சித்தம் என்றால், கடவுளும் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்க்கையை மதிப்பிட்டு மார்க் கொடுக்கிறார் என்று தானே சொல்ல வேண்டும்?" இப்படியும் பேசுவார் நமசிவாயம்.

பொதுவாக மனிதரின், உயிர்க்குல்த்தின், உலகத்தின் வளர்ச்சி வீழ்ச்சிகளையெல்லாம் பாதிக்கிற காலத்தை, கண்காணிக்கும் உபாத்தியாயர் என்று உருவகப்படுத்தினால், அந்த வாத்தியார் திருவாளர் நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைத் தாளில் தாறுமாறான மதிப்பெண்களையே சிதறி வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.

நமசிவாயத்துக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னரே அவருடைய தந்தை 'கண்ணை மூடிவிட்டார். நமசிவாயம் பிழைப்புக்காக என்னவோ வேலைகள்

தோஸ்ரீ6